– கொற்றவை சக்திவேல்
அப்பா எனக்கு இண்ணைக்கு ஒரு பாக்கெட் சாக்லேட் வேணும் என தூக்கத்தில் இருந்து எழுந்து அப்பாவிடம் கேட்டாள் மகள். அப்பா மகளை செல்லமாக மடியில் தூக்கிவைத்து கொண்டு உனக்கு எதுக்குமா ஒரு பாக்கெட் சாக்லேட்?
“அதுவா இண்ணைக்கு என்னேட ப்ரண்டுக்கு பிறந்த நாள் அதான். அப்படியா உன் ப்ரண்டுக்கு நாம எதுக்கு சாக்லேட் வாங்கி கொடுக்கணும்.
அவங்க அப்பா அம்மா சாக்லேட் வாங்கி கொடுக்க மாட்டாங்களா, இல்லப்பா அவளுக்கு என்ன தவிர யாருமே இல்லை ஓ.. அது யாரும்மா .. அது என்னோட செடிதாம் அப்பா. நான் தினமும் அதனிடம் பிறந்த நாள் பற்றியும் பிற விடையங்கள் பற்றியும் பேசுவேன்பா என்று கூற அப்பா சிரித்தவாறே யாராவது செடிக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவாங்களா இல்லப்பா நான் கொண்டாடணும் பாவம்பா செடி நன் அதுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவேன்ணு வாக்கு கொடுத்துட்டேன். அது தவிர என் நண்பர்களையும் பிறந்த நாள் விழா கொண்டாட வீட்டுக்கு கூப்பிட்டுட்டேன் அப்பா. அந்த செடிக்கு பெயரும் வச்சிருக்கேன். நம்ம அம்மா பெயர் தான் என கண்கலங்க மன்றாடினள் மகள்.
அப்பா வேண்டா வெறுப்புடன் சரி வாங்கி தர்றேன் என்று மகளை அமைதிப்படுத்தி அம்மாவிடம் அனுப்பி வைத்தார்.
இன்று சுதந்திர தின விழா அதனால் வழக்கத்தை விட சீக்கிரம் பள்ளிக்கு சென்றார் அப்பா. அவர்தான் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்.
பள்ளியில் அவர் செல்வதற்கு முன்பே சுதந்திர தின விழாவுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது பள்ளிக்கு வந்ததும் முதல் வேலையாக அவர் தலைமையில் மூவர்ண கொடி ஏற்றப்பட்டு பள்ளிக்கு வந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
அடுத்த நிகழ்ச்சி மரம் நடும் விழா.. மரம் நடுவதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. உடனே அவர் போன வருடம் தான் நட்ட மரக்கன்றை சென்று பார்த்தார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் நட்ட மரம் அங்கு இல்லை. மாறாக அங்கு சாப்பிட்டு தூக்கி போட்ட கழிவுகளும், நெகிழிகளும் நிறைந்திருந்தன. அங்கு மண்வெட்டியுடன் ஓடி வந்த பீயுண், சார் ஐந்து நிமிடத்தில் சுத்தம் பண்ணி தரேன் என்று மண் வெட்டியை கொண்டு வேக வேகமாக சுத்தம் பண்ண ஆரம்பித்தார். இவர்தான் இந்த பள்ளியில் அதிக காலம் பணியாற்றுபவர். அப்பாவுக்கு மகளின் நியாபகம் வந்தது. ஏதையோ யோசித்தபடியே பீயூணிடம் ஐயா நம்ம பள்ளியில எத்தனை வருடங்களாக மரம் நடு விழா கெண்டாடுறோம். அதுவா சுமார் 15 வருடங்களுக்கு மேலாக கொண்டாடுறோம் சார் , ஒரு வருசம் எத்தனை மரங்கள் நடுவாங்க ஒரு வருசம் மாணவர்கள். ஆசிரியர்கள் எல்லோரும் சேர்த்து சுமார் 30 மரத்துக்கு மேல நடுவாங்க சார் என்று பீயுண் பேசிகொண்டிருக்க சுற்றி பார்த்தார். சுமார் 40 மரங்களுக்கு உள்ளே தான் இருக்கும் ஆனால் அதில் பெரும்பாலும் 50 ஆண்டுகளுக்கு முன்பே உள்ள மரங்கள். அங்கு 15 ஆண்டுகளாக மரம் நடும்விழா நடைபெற்றதற்கான எந்த சுவடும் இல்லை. அவரை பின் தொடர்ந்து ஆசிரியர்களும் மாணவர்களும் அவர் நடுவதற்கு முதல் செடியைக் கொண்டு வந்தனர். அவர் வருத்தத்துடனே அந்த செடியை நட்டு கொண்டிருக்க பின்னால் இருந்து ஒரு ஆசிரியர் சார் இது விலை உயர்ந்த மரம் சார். பெரிதானால் இலட்சக்கணக்கில் விலை போகும் என கூற கோபம் கலந்த வருத்தம். மேலும் மனதை தோற்றிக் கொண்டார் தலைமை ஆசிரியர் மரம் நடுவதை மாணவர்களும் ஆசிரியர்களும் தாங்கள் வைத்திருந்த மொபைல்களில் போட்டோ எடுத்து கொண்டனர். பின்னர் தாங்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மரம் நட்டு மகிழ்ந்தனர். அந்த நிகழ்வை பலர் தங்களது சோசியல் மீடியாக்களிலும் ஷேர் செய்து மகிழ்ந்தனர். அதன் பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியில் தலைமை ஆசிரியர் உரை ஆற்ற தொடங்கினார். அவர் தேச தலைவர் பற்றி உரையாற்ற குறிப்புடன் வந்தவர், மரம் நடும் விழா பற்றி பேச ஆரம்பித்தார். நாம் பள்ளியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக மரம் நடும் விழா கொண்டாடுகிறோம். 15 ஆண்டுகளில் சுமார் 500 மரங்களுக்கு மேல் நாம் நட்டிருப்போம். ஆனால் நாம் நட்ட மரங்களில் 10 சதவீதம் மரங்கள் கூட உயிருடன் இல்லை நம்மில் பலர் இங்கு பல முறை மரங்கள் நட்டிருப்போம் அந்த மரங்கள் எல்லாம் எங்கே? நாம் பாதுகாக்க தவறிவிட்டோம். நாம் மரங்களை நடுவதை விட நாம் மரங்களை பாதுகாக்க வேண்டும் அதற்கு ஒரே வழி நாம் ஒவ்வொரு ஆண்டும் மரம் நடும் விழா கொண்டாடுவது போல் மரங்களுக்கு பிறந்த நாள் விழாவும் கொண்டாட வேண்டும் என்று அவர் உரையை முடிக்க சுற்றி இருந்த ஆசிரியர்களும் ‘ மாணவர்களும் மற்றும் பிற கூடி இருந்த மக்களும் பலத்த சத்தத்துடன் கைதட்டி அவர் உரையை வரவேற்றனர். மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்வு தோன்றி கொள்ள உரையை முடித்ததும் வேக வேகமாக மகளுடன் மரத்திற்கு பிறந்த நாள் விழா கொண்டாட சாக்லேட்றுடன் வீட்டை நோக்கி புறப்பட்டார் …
Leave a Reply