இரா.சிவானந்தம்
காதலித்ததையும் அந்த
காதல் பல தடைகளால்
உடைபட்டதையும் மனைவியிடம்
சொல்ல விரும்பாத கதையாக
மறைத்து தன் பெருமைகளை மட்டும்
சிறப்பாகச் சொன்னான்.
கல்லூரியில் தன்னை சிலர்
சுற்றி வந்ததையும்
ஒருவன் மிக அதிகமாக
காதலிக்க வலியுறுத்தியதையும்
இதையெல்லாம் விரும்பாமல்
சவலாக சமாளித்ததையும்
சொன்னால் சந்தேகக்குறி
விழுமென சொல்ல விரும்பாத
கதையாக மறைத்து கணவன்
மீதுள்ள அன்பை மட்டும்
வெளிப்படுத்தினாள்
Leave a Reply