மீன்கொத்தியின் அலகில் மினுங்குகிறேன்

மீன்கொத்தியின் அலகில் மினுங்குகிறேன்

  • By Magazine
  • |

இரா. அரிகரசுதன்

கற்சிலையாக்கப்பட்டிருந்த

காணாமல்போன

ஒரு நாட்டு மீன்கொத்தியைக்

கண்டேன்

கண்களைப் பொத்தி

அதன் மேலொரு மீன்கொத்தியென

பொருந்திப் பார்த்தேன்

மீன்கொத்தி

மீன்கொத்திதான்

ஏ கொழுத்த மீன்களே

உங்கள் வயிற்றுக்குள் கிடக்கும்

எம் நிலத்தின் மூதாததையரின்

சதைத்துணுக்குகளைக் கண்டடையும் வகையில்

நான் வேட்டையாடுவேன்

மீன்கொத்தியின் அலகில்

மினுங்குவது வேட்டையே அன்றி

மீன் அல்ல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *