காலம் கடந்து

  • By Magazine
  • |

– கை. செல்லத்தங்கம்

அங்கே. அது பொது மருத்துவமனை இயன்முறை சிகிச்சை (பிசியோதெரபி) செய்யும் இடம். இதற்காக நான் சென்று வருவது வழக்கம். நாற்பது தாண்டினாலே எல்லோருக்கும் கால்வலி வந்து விடுகிறது போன்ற பலர் அங்கே வருவதுண்டு. இன்றைய வாழ்வியல் முறையும் உணவும் பழக்கமும் கூட அதற்கு காரணம் தான். மாத்திரை மருந்துகளை உட்கொள்ள விரும்பாதவர்கள் மசாஜ் செய்து தற்காலிக தீர்வு பெற்று வருகின்றனர். நானும் இருமுறை செல்வதுண்டு. வாரம்தோறும் தொடர்ந்து செல்வதால் அறுபதுக்கு மேற்பட்டோர் பலர் நலம் விசாரிக்கும் அளவு நண்பர்கள் ஆகிவிட்டோம்.

போன வாரம் வரல்லண்ணா காணலையே என்று கேட்கும் அளவு பழக்கம். இந்த வயதில் முதுகுவலி, இடுப்புவலி, கைவலி என்று வருவார்கள். நிவாரணம் பெற்றவுடன் நின்று விடுவார்கள். அவ்வாறு வந்தவர்களில் ரோகிணி.

இரண்டு மூன்று நாட்களாக சிகிச்சை பெறும்போது பார்த்தேன். அன்றைக்கு ஏதோ பேசிட்டு படுக்கையில் சிகிச்சைக்கு தயாராக இருந்தாள். எப்போதும் சிரிக்க மட்டும் செய்யும் அவளது முகம் அன்று ஏதோ சிந்தனையாக இருந்தது. என்னம்மா பிரச்சினை என்றேன். இடுப்புவலி என்றாள். என் வீட்டுகாரரோடு வண்டியில் வரும்போது வேகத்தடையில் விழுந்துவிட்டேன், அடி பலமாக விழுந்துவிட்டது. சிகிச்சை எடுத்தும் வலியும் தீரவில்லை. மருத்துவரின் ஆலோசனையின் படி சிகிச்சை எடுக்கிறேன் என்றாள்.

அவளுக்கு இருபதில் இருந்து இருபத்து மூன்று வயதிற்குள் தான் இருக்கும். மொத்தமாக 40 கிலோ எடைதான் இருப்பாள். சிறிய உருவம். நெற்றி வகிட்டில் குங்குமமும் திருமாங்கலியமும் அவள் திருமணமானவள் என்பதை காட்டியது.

உன் பெயர் என்னம்மா என்றேன். ரோகிணி என்றாள். குழந்தை இருக்கிறதா என்றேன். இல்லை, இப்போதைக்கு வேண்டாம் என்று இருக்கிறோம் என்றாள். கல்யாணமாகி எத்தனை வருடமாகிறது என்றேன். என் முகபாவனையைக் கவனித்தவள், 18 வயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டது, இப்போ 3 வருஷம் ஆகிவிட்டது என்றாள். மேலும் ஆண்டி என்று கூப்பிட்டு அவளாகவே தொடர்ந்தாள்.

கவர்மெண்ட் எக்ஸாம் எழுத தான் பத்தாம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும், TNPSC

எழுத ஆசை என்றும் கூறினாள். கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி தான், ஆனால் இப்போ எல்லோரும் டிகிரி படிச்சவங்க, அதுக்கும் மேல படிச்சவங்க தான் எக்ஸாம் எழுதுறாங்க. அவங்களோடு போட்டி போட்டு படித்து ஜெயிக்க முடியுமா? நீ ஏன் டிகிரி படிக்கவில்லை என்று கேட்டேன். ஆண்டி அது பெரிய கதை என்றாள்.

பத்தாம் வகுப்பு படிக்கும் போதே காதல் வயப்பட்டுவிட்டேன். எங்கள் வீட்டில் கண்டிப்பு என்று சொன்னாள். நான் கேட்கவில்லை. உனக்கு வயசு பத்தாது, படிச்சு முடிச்ச பிறகு பார்த்துக்கலாம் என்று சொன்னாங்க. அப்படியென்றால் நான் படிக்கப் போக வேண்டாம், ஏதாவது வேலைக்கும் போகல என்று சொன்னாங்க. வயது ஆகட்டும் அவனுக்கே கட்டி வைக்கிறோம், அதுவரை கல்யாணச் செலவுக்கு…

வேலை செய்து தா என்று ஏன் அப்பா கண்டிப்பா சொல்லிட்டார். ஒரு மெக்கானிக் கம்பெனிக்கு வேலைக்கு போனேன். பெற்றோர் சில கண்டிஷன் போட்டார்கள். நான் காதலில் உறுதியாக இருந்தேன். 18 வயதானவுடன் எனக்கு கல்யாணம் பண்ணி அனுப்பிட்டாங்க. வீட்டோடு சேர்த்து ஒரு நாளும் இருக்கவில்லை. என் புருஷனுக்கு இப்பத்தான் கல்யாணம் ஆச்சு, அவருக்கும் படிக்க வேண்டும் வேலைக்கு போக வேண்டும் என்று ஆசை இருந்தது, மெக்கானிக் ஷாப் வச்சிருக்கிறார். உன் வீட்டுக்காரன் உன்னை படிக்கச் சொல்கிறாரா என்றேன். ஆமாம், படிக்கச் சொல்லிட்டார்.

சேர்ந்து படி என்று சொன்னேன். காலேஜுக்கு எல்லாம் போக முடியாது, இப்போ கடைக்கு போனால் கொஞ்சம் வருமானம் வரும் என்றாள். அப்படியென்றால் டுடோரியல் பார்த்து சேரு, உனக்கும் படிக்க ஆசை இருக்கிறதாலே முயற்சி செய் என்றேன். உன் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் என்றேன். காதல் கண்களை மறைத்து காலம் கடந்து இப்போது புத்தி வருகிறது இது போன்ற பிள்ளைகளுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *