கல்வி

கல்வி

  • By Magazine
  • |

கவிமுகில்.பெ. அறிவுடைநம்பி

கற்றல் என்பது மிகச் சிறப்பு- அது

கைகூடும் போது பெருமதிப்பு

ஓய்வறியா முயற்சிக்குப்பின்

உச்சம் தொடுதல் சுலபம்

பழுதில்லா பாதைப் பயணம்

வெற்றியை நோக்கி நடைபோடும்

இடையறா உழைப்பு- உந்தன்

இலக்கை அடைய வழிகாட்டும்

இளமையில் கற்றல் எளிதாகும்

இன்முகத்தோடு பயின்றிடலாம்

தொடரும் முயற்சி இருக்கும் போது

தோல்வி என்பதை விரட்டிடலாம்

திட்டமிட்ட கொள்கையினாலே

திறம்பட வென்று காட்டிடலாம்

எட்டுத் திக்கும் புகழ்பரவ

எந்நாளும் வாகை சூடிடலாம்

இளமை என்பது வசந்தமாகும்

இனிதாய் வாழ்வை அமைத்திடலாம்

கனிவாய் காலம் மாறும் போது

கற்றல் என்பதே கைகொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *