டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S)
வயிற்றில் ஏற்படும் புண்களையும், சிறுகுடலின் முன்பகுதியில் ஏற்படும் புண்களையும் பொதுவாக நாம் வழக்கத்தில் குடல்புண் (அல்சர் – Peptic ulcer) என்று அழைக்கிறோம்.
நாட்பட்ட குடல்புண்நோய் உள்ளவர்கள் உடலும், மனமும் குன்றி போவதால் இதனை குன்மம் என சித்தமருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயிற்று பகுதியில் ஏற்படும் புண்களை வயிற்றுப்புண், Gastric ulcer, Stomach ulcer என்று அழைப்பதுண்டு.
வயிற்றுபகுதியை தொடர்ந்து வரும் சிறுகுடலில் ஏற்படும் புண்களை- சிறுகுடல் புண் (duodenal ulcer)) என்று அழைக்கப்படுவதுண்டு.
குடல்புண் நோயினால் சுமார் 4 முதல் 10 சதவீதம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக நடுத்தர வயது மற்றும் முதிர்ந்த வயதுடையவர்கள் அதிகமாக இந்நோயில் பாதிக்கப்படுகிறார்கள்.
குடல்புண் நோய் உண்டாவதற்கான காரணங்கள்
வயிற்றில் ஜீரணத்திற்காக சுரக்கப்படும் திரவத்தில் அரிக்கும் தன்மையுள்ள ஹட்ரோகுளோரிக் அமிலம் உள்ளது. இதன் அமிலத்தன்மை பொதுவாக PH 1.5 முதல் 3.5 ஆக இருக்கும். பட்டினியாக இருக்கும் போது PH 1 முதல் 2 ஆக இருக்கும். இது வயிற்று சுவற்றை பொசுக்கி விடும்.
ஆகவே வயிற்று சுவற்றை பாதுகாப்பதற்கு கடினமாக சளிச்சவ்வும், அமிலத்தை எதிர்த்து சளிச்சவ்வை பாதுகாப்பதற்கு சளிச்சவ்வில் காரத்தன்மை உள்ள (Bicarbonate) சுரப்பும் உள்ளது. மேலும் வயிற்றுப்பகுதியில் உள்ள அதிக இரத்த ஓட்டமும், புண் ஏற்பட்டால் உடனே சரிசெய்யும் (Rapid cell renewel) தன்மையும் உள்ளது.
மேற்கண்ட காரணிகளால் வயிற்று சுவர் பாதுகாக்கப்படுகிறது. மேற்கண்ட காரணிகளில் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது அதிகமாக அமிலத்தன்மை உள்ள சுரப்பு சுரந்தாலோ வயிற்று சளிச்சவ்வு படலம் அரிக்கப்பட்டு குடல்புண் உண்டாகும்.
நேரத்திற்கு நேரம் உணவு உண்ணாமல் இருப்பது, பட்டினி இருப்பது.
நாட்பட்ட நோயால் பாதிக்கப்படுவது. அதிக கவலை, மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது.
அதிக காரமுள்ள உணவு உண்பது, தொடர்ந்து புகைப்பிடிப்பது மற்றும் மதுப்பழக்கம்.
மருத்துவர் ஆலோசனையன்றி வலி நிவாரணி மருந்துகள் மற்றும் பிற மருந்துகள் உண்பது. ஆகாரத்திற்கு பிறகு சாப்பிட வேண்டிய மருந்துகளை ஆகாரத்திற்கு முன் சாப்பிடுவது.
மேலும் Helicobacor pylori என்னும் நுண்கிருமியாலும் குடல்புண் ஏற்படலாம்.
குடல்புண் நோய்க்கான குறிகுணங்கள்

குடல்புண் நோயாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியவைகள்
குடல்புண் நோயை ஆற்றும் பானங்கள்
குடல்புண்ணிற்கு ஆகும் காய்கறிகள்
குடல்புண்ணிற்கு ஆகும் பழவகைகள்
குடல்புண்ணிற்கான சித்த வைத்திய முறைகள்
திரிபலா சூரணம்
2 கிராம் அளவு சூரணத்தை 100 மில்லி தண்ணீர் கலந்து தினம் இரண்டு அல்லது மூன்று வேளை ஆகாரத்திற்கு முன் குடிக்கலாம்.
அதிமதுர சூரணம்
2 கிராம் அளவு சூரணத்தை 50 மில்லி தேங்காய்பாலில் கலந்து தினம் இருவேளை ஆகாரத்திற்கு முன் குடிக்கலாம்.
சங்குபற்பம்
100 மில்லி கிராம் அளவு சங்கு பற்பத்தை எடுத்து 5 சொட்டு பசு நெய்யில் கலந்து தினம் இருவேளை ஆகாரத்திற்கு முன் உண்ணலாம்.
மேலும் ஏலாதி சூரணம், காவிக்கல் சூரணம், குன்ம குடோரி மெழுகு, அண்டலேகியம், வில்வாதி லேகியம், உப்புச்செந்தூரம் போன்ற பல மருந்துகள் சித்த வைத்தியத்தில் குடல்புண் நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
நோய்குறி குணங்கள், நோயின் தீவிரத்தன்மை, உடல்நிலை இவற்றை பொறுத்து மருந்துகள் பயன்படுத்த வேண்டும் என்பதால் சித்தமருத்துவ அறிவுரையின் படி மேற்படி மருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கவனிக்க வேண்டியவைகள்
குடல் புண்ணில் இருந்து இரத்தம் கசிந்து ஜீரணமாகி கறுப்பு நிறத்தில் மலம் வெளிவருவதை குறிக்கும். இதனால் விரைவில் இரத்தசோகை ஏற்படும். இதற்கு உடனடியாக அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
சரிவர மருத்துவம் செய்யாத குடல்புண் நோயாளர்களுக்கு திடீரென தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டால் உடனே அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
Leave a Reply