– முனைவர் மோகனா, பழனி
வைட்டமின் D மார்பக புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துமா? சுமார் 79% வரை புற்று நோய் சிகிச்சையை நன்றாக மேம்படுத்தும் என அறுதியிட்டுக் கூறுகின்றனர விஞ்ஞானிகள். இது தொடர்பாக ஆய்வுகள் நடந்து, அதன் முடிவுகள், உணவியல் மற்றும் புற்றுநோய் (Nuitrition &Cancer) ஆய்வுப் பத்திரிக்கையில் 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் 28, வெளிவந்தாகிவிட்டது.
இப்போது நாம் வைட்டமின் என்றால் என்ன? நம் உடலில், அதன் பணி என்ன? அது என்ன நன்மையை மனிதனுக்குத் தருகிறது என்றும், பார்ப்போம்.
வைட்டமின் டி-யின் பங்கு:
வைட்டமின் டி கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்ச உதவுவதற்காக மிகவும் பிரபலமானது. இவை எலும்புகளை வலுப்படுத்த மிக முக்கியமானவை. எனினும் வளர்ந்து வரும் சான்றுகள், நோயெதிர்ப்புச் செயல்பாட்டிலும் இது ஒரு பங்கு வகிக்கிறது என்று காட்டுகின்றன. தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து (புற்றுநோய் உட்பட) உடலைப் பாதுகாக்க இது உதவுகிறது. வைட்டமின் டி மற்றும் புற்றுநோய் குறித்த முந்தைய பல ஆய்வுகள், இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்டதைவிட மிக அதிக அளவுகளிலேயே கவனம் செலுத்தியிருந்தன.
உடல் வைட்டமின் டி-யை முக்கியமாக சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்கிறது, மேலும் சில உணவுகள் மூலமாகவும் இதைப் பெறலாம். தற்போதைய வழிகாட்டுதல்கள் பெரும்பாலான பெரியவர்களுக்கு தினமும் 600 IU என்றும், முதியவர்களுக்கு 800 IU என்றும் பரிந்துரைக்கின்றன. அமெரிக்கக் குழந்தை மருத்துவ அகாடமி குழந்தைகளுக்கு தினமும் 400 IU அளிக்க பரிந்துரைக்கிறது. அதிகப்படியான அளவு தீங்கு விளைவிக்கும்; வாந்தி, பலவீனம், எலும்பு வலி, சிறுநீரகக் கற்கள் போன்ற அறிகுறிகளுக்கு ஆய்வு மருத்துவத் துறையில் வைட்டமின் டி கீமோதெரபி சிகிச்சையின் விளைவுகளை அதிகரிக்கக் கூடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. சிறிய அளவிலான இந்த ஆய்வில், தினமும் வைட்டமின் D எடுத்த பெண்களில், புற்றுநோய் முழுமையாக மறையும் வாய்ப்பு அதிகமாக இருந்தது.
வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பல நோயாளிகளிடம் இது குறைவாகவே காணப்படுகிறது.
ஆகவே, இது எதிர்பார்த்ததை விட முக்கிய பங்காற்றக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இது மலிவான மற்றும் எளிதாக கிடைக்கும் ஒரு முறையாக இருப்பதால், இதை மேலும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என அவர்கள் கூறுகின்றனர்.
பிரேசிலில் உள்ள São Paulo State University (UNESP) மருத்துவக் கல்லூரியில், வைட்டமின் D மாத்திரையை, பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் கீமோதெரபி சிகிச்சையுடன், ஒரு துணைப் பொருளாகப் பயன்படுத்தி ஆய்வு செய்தனர். மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவர்கள் எதிர்பாராத விதமாக, மிகவும் மேம்பட்ட முடிவைக் கண்டனர். அது என்னவென்றால், ஒரு சாதாரண வைட்டமின் D மாத்திரை, மார்பக புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை விளைவுகளை மேம்படுத்தக்கூடும் என்று ஆய்வின் முடிவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், 45 வயதுக்கு மேற்பட்ட, மார்பகப் புற்றுநோய்பாதிக்கப்பட்ட 80 பெண்களை எடுத்துக்கொண்டனர். அவர்களை இரு குழுக்களாகப் பிரித்தனர். ஒவ்வொரு குழுவிலும் 40 பெண்கள், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தனர்.
ஒரு குழுவுக்கு தினமும் 2,000 IU வைட்டமின் டி கொடுக்கப்பட்டது மற்ற குழுவுக்கு பிளாசிபோ (placebo) என்ற ஒன்றுமே இல்லாத (மருந்தில்லா மாத்திரை) கொடுக்கப்பட்டது. அனைவருக்கும், அறுவை சிகிச்சைக்கு முன் நியோஅட்ஜுவண்ட் வேதிச்சிகிச்சை (neoadjuvant chemotherapy) செய்யப்பட்டது. இது அறுவைசிகிச்சைக்கு முன் கட்டிகளைச் சுருக்கி, அவற்றை எளிதில் அகற்றும் வகையில் செய்யப்படும் சிகிச்சையாகும். அதன் பின்னர் 6 மாதங்களுக்குப் பின்னர் .சோதனை செய்யப்பட்டன. முக்கிய முடிவுகள் எடுத்துப்பார்த்தனர்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, இரண்டு குழுக்களுக்கிடையேயான வேறுபாடு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. வைட்டமின் டி உட்கொண்டவர்களில், 43% பேருக்கு வேதிச்சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் முற்றிலுமாக மறைந்திருந்தது. அதேவேளையில், மருந்துப்போலி குழுவில் இதே முடிவை 24% பேர் மட்டுமே பெற்றிருந்தனர். இந்த முடிவுகள் நியூட்ரிஷன் அண்ட் கேன்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
. இதன் மூலம், வைட்டமின் D எடுத்தவர்களில், வேதிசிகிச்சை வெற்றி சுமார் 79% அதிகம் காணப்பட்டது.
இதன் மூலம் தெரிய வரும் தகவலும், ஆய்வாளரின் கருத்தும் ஆய்வாளர்களில் ஒருவரான பேரா. முனைவர் எடுவார்டோ கார்வால்யோ-பெசோஆ (Eduardo Carvalho-Pessoa) கூறுவதாவது:
“பங்கேற்பாளர்கள் குறைவாக இருந்தாலும், கீமோதெரபி விளைவில் கணிசமான வித்தியாசம் தெரிந்தது.
மேலும், இந்த ஆய்வில் பயன்படுத்திய வைட்டமின் டி யும் தினசரி 2,000 IU அளவுதான். வைட்டமின் டி குறையை சரிசெய்யப் பயன்படுத்தப்படும் அளவான வாரத்திற்கு 50,000 IU-வை விட மிகவும் குறைவானது.”
ஆய்வின் தொடக்கத்தில், பெரும்பாலான பங்கேற்பாளர்களுக்கு வைட்டமின் டி அளவு குறைவாக இருந்தது – இரத்தத்தில் ஒரு மில்லிலிட்டருக்கு 20 நானோகிராம்களுக்கும் (ng/mL) குறைவாக வரையறுக்கப்பட்டது. பிரேசிலிய வாதவியல் சங்கம் 40 முதல் 70 ng/mL வரை அளவுகளைப் பராமரிக்க பரிந்துரைக்கிறது.
“சப்ளிமெண்டேஷன் மூலம், வேதிச்சிகிச்சை சிகிச்சை முழுவதும் அளவுகள் அதிகரித்தன, இது நோயாளிகளின் மீட்சிக்கான சாத்தியமான பங்களிப்பை வலுப்படுத்துகிறது” என்று கார்வால்யோ-பெஸ்சோவா FAPESP ஏஜென்சியிடம் கூறினார். “வேதிச் சிகிச்சைக்கான பதிலை மேம்படுத்தப் பயன்படும் மற்ற மருந்துகளுடன் ஒப்பிடும் போது வைட்டமின் டி என்பது எளிதில் கிடைக்கக் கூடிய, மற்றும் மலிவான பொருளும் கூட. ஆனால் இது பற்றி, இதன் பயன் பற்றி, அவற்றில் சில ஒருங்கிணைந்த சுகாதார அமைப்பில் (SUS) கூட இடம்பெறவில்லை” என்று அவர் மேலும் கூறுகிறார்.
நம்பிக்கையளிக்கும் முடிவுகள், மேலும் ஆராய்ச்சி தேவை
புற்றுநோய் சிகிச்சையில் வைட்டமின் டிக்கு ஒரு துணைப் பங்கு இருக்கக்கூடும் என இந்தக் கண்டுபிடிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. எனினும், மேலும் தரவு தேவை என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த சப்ளிமெண்ட் எவ்வளவு பயனுள்ளது என்பதை உறுதிப்படுத்தவும், அது வேதிச்சிகிச்சை பதிலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை தெளிவுபடுத்தவும் பெரிய ஆய்வுகள் உதவும்.
வைட்டமின் டி-ன் முக்கியத்துவம்
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உறிஞ்ச உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு எதிராக உடலை பாதுகாக்க உதவலாம்.
ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பத்தில் வைட்டமின் D அளவு குறைவாக இருந்தது.(20 ng/mL-க்கு குறைவாக)
சரியான அளவு: 40-70 ng/mL (பிரேசில் ரியூமடாலஜி சங்க பரிந்துரை)
பொதுவான பரிந்துரைகள்:
தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு
பெரியவர்கள்: தினமும் 600-800 IU
குழந்தைகள்: 400 IU
அதிகமாக எடுத்தால்:
வாந்தி, பலவீனம், எலும்பு வலி, சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்
. “இவை ஊக்கமளிக்கும் முடிவுகளாகும். அதிக பங்கேற்பாளர்களுடன் புதிய கட்ட ஆய்வுகளை நியாயப்படுத்துபவை ஆகும். இது வேதிச்சிகிச்சை சிகிச்சைக்கான பதிலை அதிகரிப்பதிலும், அதன் விளைவாக மார்பகப் புற்றுநோய் நீங்கும் வாய்ப்பை அதிகரிப்பதிலும் வைட்டமின் டியின் பங்கைப் பற்றிய சிறந்த புரிதலை அளிக்கும்” என்று அவர் முடிக்கிறார்.
மார்பகப் புற்றுநோயில், வைட்டமின் டி செல் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், வீரியம் மிக்க செல்களின் அப்போப்டோசிஸை (திட்டமிடப்பட்ட செல் இறப்பு) ஊக்குவிப்பதன் மூலமும், மற்றும் கீமோதெரபியின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலமும்ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது . போதுமான வைட்டமின் டி அளவு ஆபத்தைக் குறைக்க உதவக்கூடும் என்றும், அதே சமயம் அதன் குறைபாடு அதிக புற்றுநோய் பாதிப்பு, மோசமான முன்கணிப்பு மற்றும் அதிகரித்த மெட்டாஸ்டாசிஸ் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இந்த ஆய்வு நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தாலும். இது மிகவும் சிறிய அளவிலான ஆய்வுதான். இது தொடர்பான இன்னும் பெரிய அளவில் மேலும் ஆராய்ச்சி தேவையாகும். ஆனால் வைட்டமின் டி கீமோதெரபி சிகிச்சைக்கு ஒரு உதவி முறையாக இருக்கக்கூடும் என்ற நல்ல அறிகுறிஇந்த ஆய்வின் மூலம் கிடைத்துள்ளது என்பது புற்று நோய் சிகிச்சையில் ஒரு மைல் கல் எனலாம்
Leave a Reply