SAVKIA-வின் 296 -வது கருத்தாய்வுக் கூட்டம் 07.02.2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் திரு. இராஜன் ஆசான் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மரு.கமலகண்ணன். மூலச்சல் மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் இராஜேந்திரா மருத்துவமகை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில் திரு.இராஜன் ஆசான் நரம்பு பிடிப்பு, எலும்புவலி, கைகால் கோச்சுதல் இவற்றுக்கு எளிய சூரணம் செய்முறையைக் கூறினார்.
அடுத்ததாக மரு.கமலகண்ணன் தடவுமுறை தைலம் தயாரிக்கும் முறையையும், இருதய படபடப்பு, வீக்கம், பலவீனத்துக்கு சூரணம் செய்முறை, அதி மூத்திரம் கட்டுப்படுவதற்கான எளிய மருந்தினையும் தெளிவாகக் கூறினார்.
அடுத்ததாக மரு.ஷேக் முகமது வெகுமூத்திரம் கட்டுபடுவதற்கு எளிய மருந்தினையும் தீப்பட்டபுண், சுகர்புண், அடிபட்ட காயம் இவற்றுக்கு எளிய தைலம் செய்முறையையும் தெளிவாகக் கூறினார்.
அடுத்ததாக திரு.கே. செல்வநாதன் ஆசான் ஈளை, இருமல், காசம் இவற்றுக்கு திரிபலாதி சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார்.
திரு.அருள்செல்வன் ஆசான் வாய்வு, செரியாமை, குன்மம், பசியின்மை, மலச்சிக்கல், வயிற்றுப்பொருமல் இவற்றுக்கு எளிய சூரணம் செய்முறையைக் கூறினார்.
திரு. சுப்பிரமணியம் ஆசான் அவர்கள் வாயு, செரியாமை, மலச்சிக்கல் இவற்றுக்கு ஆறு கூட்டு சூரணம் செய்முறையையும், மாதவிடாய் வருவதற்கு எளிய கஷாயத்தையும், பெண் பிள்ளைகள் வயதுக்கு வருவதற்கு எளிய கசாயத்தினையும், ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு எளிய மருந்தினையும், முகவாதத்துக்கு சுடர் தைலம் செய்முறையையும், மூலம், நவமூலம் குணமாக மருந்து செய்முறை மற்றும் நடுக்குவாதம் குணமாக நகுல தைலம் செய்முறையையும் தெளிவாகக் கூறினார்.
அடுத்ததாக திரு. அருள்தாஸ் ஆசான் வர்ம தைலம் செய்முறையை கூறினார்.
திரு.ஜெகஜீவன் ஆசான் மனக்கவலை தீர கஞ்சி செய்முறை, ஒடிவுமுறிவு தைலம் மற்றும் சில ஹோமியோபதி மருந்துக் குறிப்புகளையும் கூறினார்.
மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் றிசிளிஞி -க்கு கசாயம் செய்முறை, அம்மை, வைசூரிக்கு கஷாயம் செய்முறைகளைக் கூறினார்.
அடுத்ததாக திரு.இராஜமணி ஆசான் வாதநோய்கள், வயிற்றுவலி, வயறுமந்தம் இவற்றுக்கு எளிய சூரணம் செய்முறையைக் கூறினார்.
திரு.கருணாநிதி ஆசான் வாதம், பித்தம், கபநோய்கள் குணமாக நால்பாமர எண்ணெய் செய்முறையைக் கூறினார். கூட்டத்தின் இறுதியில் திரு.கே.செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.
Leave a Reply