நமது மூலிகை மருத்துவர்
பார்ப்பதற்கு கண்களை கவரும் வண்ணம் சிவப்பு நிறத்தில் ரோமம் போன்ற வெளிப்புற வளர்ச்சியையும், அதன் உள்ளே உண்ணக்கூடிய புளிப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் கூடிய வெண்ணிற நீள் உருண்ட வடிவ சதையுடனும் அதன் உட்புறம் கடினமான ஒரு விதையையும் கொண்டு இருக்கும் பழம் தான் ரம்பூட்டான்.
இதன் பூர்வீகம் மலேசியா, இந்தோனிசியா ஆகிய நாடுகள். மேலும் இது பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் பயிராகிறது.
ரம்பூட்டான் மரவகையை சார்ந்தது. சுமார் 12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
“ரம்பூட்” என்ற மலேசிய வார்த்தை “ரோமம்” என்பதை குறிக்கும். ஆகவே ரோமம் போன்ற வளர்ச்சியை கொண்டுள்ள கனிக்கு ரம்பூட்டான் என பெயர் உண்டாயிற்று.
ரம்பூட்டான் காய் பச்சை நிறத்தில் இருக்கும். கனியும் போது இனத்திற்கேற்ப சிவப்புநிறம் அல்லது மஞ்சள் நிறம் கொடுக்கும்.
ரம்பூட்டான் மார்ச் மாதங்களில் பூக்க ஆரம்பித்து ஜீன் முதல் செப்டம்பர் மாதம் வரை கனி கொடுக்கிறது. வருடம் ஒருமுறை காய்க்கும்.
ரம்பூட்டான் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளது.
இதன் தாவரவியல் பெயர்
Nephelium lappaceum
இதில் அடங்கியுள்ள உயிர்சத்துக்கள்
அதிக அளவில் விட்டமின் C சத்தும் மேலும் விட்டமின் A, விட்டமின் B1 விட்டமின் B2, விட்டமின் B3, விட்டமின் B6, விட்டமின் B9 அடங்கியுள்ளன.
இதில் அடங்கியுள்ள தாதுசத்துக்கள்
தாமிரசத்து, மாங்கனீசு, சற்று அதிக அளவிலும் மேலும் சுண்ணாம்புசத்து, இரும்புசத்து, பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுசத்துக்களும் அடங்கியுள்ளன.
இதில் அடங்கியுள்ள தாவர வேதிப் பொருள்கள் :
Spermindine, Phenolic compound, Rutin, Vanillin, Phenylacetic acid, cinnamic acid போன்ற தாவரவேதிப் பொருள்கள் அடங்கியுள்ளது.
பிறசத்துக்கள்
நார்சத்து, புரதம், மாவுசத்தும் அடங்கியுள்ளது.
ரம்பூட்டான் பழத்தின் மருத்துவப்பயன்கள்
1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு
ரம்பூட்டான் பழத்தில் அதிக அளவில் விட்டமின் C சத்தும், தாமிர சத்தும் இருப்பதால் வெள்ளை அணுக்களை அதிகம் உற்பத்தி செய்து பலநோய் கிருமிகளிலிருந்து உடலை பாதுகாக்கிறது.
2. உடலிலுள்ள நச்சுக்களை அகற்றுவதற்கு
ரம்பூட்டான் பழத்தில் உள்ள விட்டமின் C சத்து, பினாலிக் கூட்டுபொருள் போன்றவை, ஆன்டி ஆக்சிடன்டுகளாக செயல்பட்டு உடல் செல்களிலுள்ள தேவையற்ற கேடுகளை உண்டாக்கும் நச்சுக்களை அகற்றுகிறது. மேலும் நாட்பட்ட நோய்கள், வாதநோய்கள், நீரிழிவு நோய், புற்றுநோய் இவற்றிற்கும் சிறந்தது.
3. பல் ஈறுநோய்களுக்கு
பல் ஈறில் இரத்தம் கசிதல், பல் ஈறு புண், அடிக்கடி வரும் வாய்ப்புண் இவற்றிற்கு அதிக அளவு விட்டமின் C சத்து நிறைந்துள்ள ரம்பூட்டான் பழம் சாப்பிட்டு வர நிவர்த்தியாகும்.
4. முடி மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு
ரம்பூட்டான் பழத்தில் உள்ள துத்தநாகசத்து, இரும்புசத்து, விட்டமின் B சத்து, விட்டமின் C சத்து போன்றவைகள் முடியின் வேரை உறுதிபடுத்தி முடி உதிர்தலை குறைத்து அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் முகத்தில் உண்டாகும் முகப்பரு, கரும்புள்ளி போன்றவற்றை குறைக்கிறது. மேலும் இதில் உள்ள ஸ்பெர்மிடின் என்னும் தாவர வேதிப்பொருள் தோல் சுருக்கத்தை குறைத்து, இளமையை பாதுகாக்கிறது.
5. எலும்பு ஆரோக்கியத்திற்கு
ரம்பூட்டான் பழத்தில் உள்ள சுண்ணாம்பு சத்து மற்றும் இரத சத்துப்பொருள்கள் சிறுநீரில் வெளியேறும் சுண்ணாம்பு சத்தை குறைத்து இரத்தத்தில் சீரான அளவு சுண்ணாம்பு சத்தை நிலை நிறுத்தி எலும்பு ஆரோக்கியத்தை பேணுகிறது.
6. இருதய ஆரோக்கியத்திற்கு
ரம்பூட்டான் இரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இருதய இரத்த குழாய்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்பு நீக்கி மாரடைப்பிலிருந்து நிவாரணம் கொடுக்கிறது.
7. குடல் ஆரோக்கியத்திற்கு
ரம்பூட்டான் பழத்தில் நார்சத்து உள்ளது. மேலும் இது குளிர்ச்சியான பழமாக இருப்பதால் மலச்சிக்கல், மூலநோய்கள் இவற்றிற்கு சிறந்ததாக உள்ளது.
8. இரத்தசோகை நோய்க்கு
ரம்பூட்டான் பழத்தில் உள்ள இரும்புசத்து, தாமிர சத்து, விட்டமின் C சத்து போன்றவை இரத்த சிவப்பணு உற்பத்திக்கு உறுதுணையாக இருந்து, இரத்தசோகை நோயிலிருந்து பாதுகாக்கிறது.
9. தசைபிடிப்பு
ரம்பூட்டான் பழத்தில் மெக்னீசியசத்து உட்பட பல தாதுசத்துக்கள் உள்ளன. இவைகள் நமக்கு தசைபிடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
10. கர்ப்பிணிகளுக்கு
ரம்பூட்டான் பழம் புளிப்பு சுவையுடன் கூடிய இனிப்பு சுவையும், நறுமணமும் கொண்டுள்ளதால், கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் வாந்திக்கு சிறந்ததாக உள்ளது. மேலும் இதில் உள்ள விட்டமின் மற்றும் தாதுசத்துக்கள் குழந்தை வளர்ச்சிக்கும் சிறந்தது. ஆகவே அளவோடு கர்ப்பிணிகள் இப்பழத்தை சாப்பிடலாம்.
11. கவனிக்க வேண்டியவைகள்
Leave a Reply