கதை பகிர்வு: குமரி எழிலன்.
ஒரு ஏழைக் கிழவர்…மூன்று மகன்கள் .
உங்களுக்கு நான் விட்டுப்போகக்கூடிய பொருள் ஏதுமில்லை..ஆனால்.உடல் வலிவும்..மதிநுட்பமும் தான் உங்கள் சொத்து என்பதை மறவாதீர்கள்..
எப்போதும் ஒன்றுசேர்ந்து வாழுங்க..பார்ப்பதை கூர்ந்து கவனியுங்க..
கிழவர் மரணித்தார்..
மகன்கள் மூவரும் வெளியூருக்கு பயணம் புறப்பட்டார்கள்..காடு, மலை கடந்து பாலைவனத்துக்கு. வந்துவிட்டனர்..
எதிரே ஒருவர் ஏதோ ஒரு பொருளைத் தேடிக்கொண்டே வந்தார்..
நீங்கள் தேடுவது ஒரு ஒட்டகமா.. என்று கேட்டான் மூத்தவன்..
அவ்ஒட்டகத்தின் இடதுகண் பார்வை கிடையாதா.. இது இரண்டாவது மகன் கேள்வி..அதன்மீது ஒரு பெண்ணும் சிறு குழந்தையும் இருந்தார்களா என மூன்றாவது மகன் வினவினான்
அத்தனையும் உண்மை எங்கிருக்கிறார்கள்…என்று பதட்டப்பட்டான்..
நாங்கள் நேரில் பார்க்க வில்லை ஒரு அனுமானம் தான்..என்றனர். வழக்கு மன்னனிடம் போனது..
ஒட்டகத்தின் கால்தடம் ஆழப்பதிந்திருந்து.. பக்கத்தில் ஒரு தாய் மகள் கால்தடம் இருந்து..பாதையில் ஒருபக்கத்து இலைகள் கடிக்கப் பட்டிருந்தன….என்றனர்
அவர்களின் கூரிய பார்வைத்திறனைப் பாராட்டி பொன்னளித்து பாராட்டி அனுப்பி வைத்தார் மன்னர்.
Leave a Reply