மலை எங்கே மக்கா                       (வெறியாட்டு அல்லது முடியாட்டம் பாடல்)

மலை எங்கே மக்கா (வெறியாட்டு அல்லது முடியாட்டம் பாடல்)

  • By Magazine
  • |

– மருந்துவாழ் மலையன்

மலை எங்கே – என் மக்கா

மலை எங்கே மக்கா

முழங்கும் அருவியும்

கிளிகளின் கதைப்பும்

இலைகளின் உரசலும்

எங்கே என் மக்கா

இலைமழைப் பொழிய நனைந்து

விலங்கொடு வாழ்ந்தக் காட்டில்

நிலவொளி தங்கிக் குரவையாடிய

மலை எங்கே – என் மக்கா                                                               – (மலை எங்கே)

நெஞ்சம் பெடைக்கவே மக்கா

மலையில் வேட்டு வெடிக்குதே மக்கா

வெடியில் குயில்கள் அழுகுதே மக்கா

மரங்கள் இரத்தம் வடிக்குதே மக்கா                                     – (மலை எங்கே)

லாரிகள் ஓடவே மக்கா

மான்கள் தானாய் மாளுமோ மக்கா    

மலை லாரியில் போகுது மக்கா             

மண்டையில் மயிர் இருக்குது மக்கா                                   – (மலை எங்கே)

கனவில் மலையம்மா மக்கா

தினமும் பேயாட்டம் போடுறா மக்கா

ஒரு கேள்வியும் கேட்கிறா மக்கா

நம்ம மலை எங்கே மக்கா                                                              – (மலை எங்கே)

சொல்லெடுக்கணும் மக்கா

கோலெடுக்கணும் மக்கா – அந்த

அம்பெடுக்கணும் மக்கா – நின்று வில்தொடுக்கணும் மக்கா                      – (மலை எங்கே)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *