உலகின் முதல் எழுத்தாளர்

உலகின் முதல் எழுத்தாளர்

  • By Magazine
  • |

ஆதிகால சுமேரியாவும், பாபிலோனும்தான் நாகரிகம், மற்றும் எழுத்துக்களின் பிறப்பிடம் என்று சொல்லப்படுகிறது.   யூப்ரடீஸ், டைக்ரீஸ் நதிகளுக்கிடையே இருந்த, பண்டைய மெசபடோமியாவின்  ஒரு நகரம்தான் பாபிலோன். மெசபடோமியாதான் மனித நாகரிகத்தின் தொட்டில் என்றும், வளமான பிறைநிலம் (Fertile Crescent)  என்றும் போற்றப்படுகிறது.  அந்த காலம், கற்காலத்தின் முடிவாகவும், பித்தளை/உலோக காலத்தின் துவக்க காலமும் கூட. அப்போதுதான்  எழுத்து துவங்கியதும் கூட.  பழங்கால சுமேரியர்கள் கல்வியில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தனர். எதனையும் பதிவு செய்வது அங்கே முக்கியமாக கருதப்பட்டது. தமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி புகட்டினர். அங்கு, பட எழுத்துக்களும், கியூனிபாரம் வடிவ எழுத்துக்களும் புழக்கத்தில் இருந்தன. பாபிலோனிய தொங்கும் தோட்டம், பழங்கால ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகும்.

பாபிலோனில் கி.மு. 2354 ல் வாழ்ந்த புகழ்பெற்ற பெண்தான், என்ஹெடுவான்னா (Enheduanna) என்பவர்.  என்ஹெடுவான்னா என்பதற்கு சொர்க்கத்தின்  மிக உயர்ந்த பெண்ணின் ஆபரணம் என்றே பொருளாகும். உலகில் , தொழில்நுட்ப வரலாற்று ரீதியாக பதிவு செய்யப்பட்ட முதல் எழுத்தாளர் பெண் என்ஹெடுன்னா மட்டுமே.  இவர் சுமார் 4300 ஆண்டுகளுக்கு முன்பே. சந்திரனின் மனைவியான பெண் கடவுள் இனன்னாவின்  மதகுருவாகவும் / பிரதான பூசாரியாகவும், வானவியலாளராகவும் வாழ்ந்தார். அந்தக்காலத்தில், என்ஹெடுவான்னா,  தெய்வாம்சம் பொருந்தியவராகவும், வீரம் செறிந்தவராகவும் போற்றப்பட்டார். அவரைப்பற்றிய மதிப்பீடுகளும், கற்பனைகளும், மக்களிடையே மிக உயர்ந்த நிலையில் உலவின. அவருக்கென்று ஓர் உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டு அந்தக்காலத்தில் பெண்மையின் உருவாக கொண்டாடப்பட்டார்.

இவர்தான் உலகில் முதன் முதல் அறியப்பட்ட எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்ஹெடுவான்னா,  பண்டைய மெசபடோமியாவில் (கிமு 2285 – 2250) கிமு 23 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் என்று பரவலாகக் கருதப்படுகிறார். Enheduanna ஒரு குறிப்பிடத்தக்க போற்றுதலுக்கு உரிய பெண். அவர் ஓர் இளவரசி, மதகுரு (தலைமைப் பூசாரி ) மற்றும் ஓர் எழுத்தாளர் மற்றும் கவிஞர். ஆதிகால  மெசபடோமிய அரசாங்கத்தின்  “அக்காட்டின்” நாட்டின்  உயர் நிலையிலுள்ள தலைமைப்  பூசாரி என்ஹெடுவான்னாதான். இவர் வடக்கு மற்றும் தெற்கு மெசபடோமியாவின் அக்காடியன்  நகரின் முதல் ஆட்சியாளர் ஆட்சியாளரான “சர்கோன்’”என்பவரின்  மகள். (கி.மு 2334-2279ல்  ஆட்சி செய்தவர்).  என்ஹெடுவான்னா ஏராளமான கவிதைகள் மற்றும் கடவுள்களின் மேல் பாசுரப் பாடல்கள் மற்றும் புராணங்களை எழுதியுள்ளார். அவள் சுமேரிய நகரமான ஊர் (Urr) என்ற இடத்தில் வாழ்ந்தார்.

என்ஹெடுவான்னாவின் தாயும் ஒரு பெண் மதகுருதான். இவரது, அம்மாவின் பெயர், ராணி “டாஸ்லுல்டும்” என்பதாகும். சார்கோனின் அன்னையும்கூட மதகுருவே. இவர்கள் பரம்பரையில் பெண்களை மதகுருவாக வைத்துள்ளனர். என்ஹெடுவான்னாவின், மததொடர்பான, பாடல்களும், கவிதைகளும், அரசியல் ரீதியாக அவரது தந்தையின் ஆட்சிப் பொறுப்பிற்கு  மிகவும் தூண்டுதலாக இருந்தன என்று அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்டது. அவர் கடவுளைப்பற்றி தொகுத்த பாசுரங்கள்தான், அக்காடியன் அரசில் இருந்த சுமேரிய கடவுள் வழிப்பாடு பற்றிய உலகின் முதல் தொகுப்பு என்றும் சொல்லப்படுகிறது. மேலும் என்ஹெடுவான்னாவின், இறைவழிபாட்டு வாசகத்தின் மூலமே, அவரது தந்தை 7 போர்களிலும் வெற்றிக்கொடியை நாட்டினார் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாலாயிரம் ஆண்டு சரித்திரம்

பாபிலோனில் 1927 ஆம் ஆண்டு தோண்டி எடுக்கப்பட்ட அகழ்வுகளிலிருந்து உள்ள  ஒரு  வட்டத்தட்டில் அவரது உருவமும் அவரது தீரச் செயல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தட்டில், அவர் மதகுருவுக்கான, நீள்அங்கியை அணிந்து, இரு பெண் சீடர்களுக்கு முன் நிற்கிறார். அவர் அருகிலுள்ள ஒரு செடிக்கு சீடர்கள் அபிஷேகம் செய்வதையும் மேற்பார்வை இடுகிறார். சுண்ணாம்புக்கல்லால் ஆன அந்த வட்டத் தட்டு இப்போது, அமெரிக்காவின், பென்சில்வேனியா அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் எழுத்தாளர்

உலகின் பண்டைக்கால முதல் எழுத்தாளர் ஒரு பெண் என்பது மட்டுமல்ல. கிமு மூன்றாம் மில்லினியத்தின் மத்தியில் மெசபடோமியாவை ஒருங்கிணைத்து முதல் சாம்ராஜ்யத்தை நிறுவிய மன்னன் அக்காட் நாட்டின் மன்னன் சர்கோனின் மகள், தற்போதைய ஈராக்கின் தெற்கில் உள்ள “உர்” நகருக்கு பொறுப்பேற்க தனது தந்தையால் அனுப்பப்பட்டார். சந்திரக் கடவுளான ‘இனன்னா” கோவிலின் கவிதைத் திறன்களைக் கொண்ட ஒரு திறமையான பாதிரியாராக என்ஹெடுவான்னா மாறினார். அவரது நூல்கள் மிக அழகான சுமேரிய இலக்கியப் படைப்புகளில் ஒன்றாகும். காதல் மற்றும் போரின் தெய்வம் மற்றும் “உர்” ஊரின் புரவலர் இனன்னா தெய்வம்  மீதான அவரது பக்தியை அவை பிரதிபலிக்கின்றன.

                என்ஹெடுவான்னாவின் எழுத்துக்கள் மெசபடோமியர்களின் தலைமுறையினருக்கு இனன்னாவைப் பற்றிய பார்வையில் செல்வாக்கு செலுத்த உதவியது. அவளை ஒரு சிறிய தெய்வத்திலிருந்து ஒரு உயர்ந்த தெய்வமாக உயர்த்தியது என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.

தனித்துவமான என்ஹெடுவான்னா

கடவுள் பாசுரம் மட்டும் என்ஹெடுவான்னா அவர்களை தனித்துவமாக்கவில்லை. என்ஹெடுவான்னா கடவுளின் மகிமையைப் பாடுவதற்கு தனது மதப் பாடல்களைப் பயன்படுத்தவில்லை  அவர் தனது வாழ்க்கையின் தருணங்களையும் விவரித்தார். அவர் தனது தனிப்பட்ட பிரதிபலிப்பில் “நான்” என்ற பிரதிபெயரைப் பயன்படுத்தினார். இது அந்தக் காலத்தின் எழுத்துக்களுக்கு மிகவும் அரிதானது.  அவரது நூல்கள் பல நூற்றாண்டுகளான களிமண் பலகைகளிலிருந்து  அமெச்சூர் எழுத்தாளர்களால் நகலெடுக்கப்பட்டன. என்ஹெடுவான்னா தனது கவிதைகளில் இனன்னாவை இஷ்தாரின் போர், வெற்றி, அன்பு மற்றும் மிகு சக்திவாய்ந்த தெய்வமாக சித்தரிக்கிறார்.

 வரலாறு தொடங்கிய பழங்கால இடம்

1927 ஆம் ஆண்டு வரை தொல்பொருள் ஆய்வாளர் சர் லியோனார்ட் வூலி தனது பெயரைக் கொண்ட பொருட்களை அகழ்வாராய்ச்சி செய்யும் வரை என்ஹெடுவான்னா யார் என்பதே நவீனத்துவத்திற்கு முற்றிலும் தெரியாது. அவரது பெயர், என்ஹெடுவான்னா என்பது சுமேரிய மொழியில், “சொர்க்கத்தின் ஆபரணம்” என்று பொருள்படும். மேலும்   சந்திரன் தெய்வமான இனன்னா, சுயனின் உயர் பூசாரியாக, அவர் 42 பாசுரப்பாடல்களையும் மூன்று தனித்த கவிதைகளையும் இயற்றினார், அவை கில்காமேஷின் காவியத்தைப் போல, அறிஞர்கள் மெசபடோமியாவின் இலக்கிய மரபின் ஒரு முக்கிய பகுதியாக கருதுகின்றனர். என்ஹெடுவான்னா ஒரு மதகுரு மற்றும் தலைமைப் பூசாரி என்ற அரசபதவியுடன்  இணைந்து, சர்கோனின் மகளாக அரசியல் அதிகாரத்தையும்  பயன்படுத்தினார்.

இது உலகின் முதல் பேரரசின் நிறுவனர் என்று சில வரலாற்றாசிரியர்களால் பாராட்டப்பட்டது.  மெசபடோமியாவின் தெற்குப் பகுதியில் உள்ள 42 கோயில்களுக்காகவும்  என்ஹெடுவானா எழுதியுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அந்த நகரங்களில் உள்ள வழிபாட்டாளர்களுக்கு புரவலர் தெய்வத்தின் தனித்துவமான தன்மையை எடுத்துக்காட்டின.  அவரது மறைவுக்குப் பிறகும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கோயில்களில் உள்ள எழுத்தாளர்களால் என்ஹெடுவானாவின்  பாடல்கள் நகலெடுக்கப்பட்டன.

என்ஹெடுவான்னாவின் களிமண் பலகை

என்ஹெடுவான்னாவின் எழுத்துக்கள் அதன் நிகழ்வுகள் முழுவதும் அதன் கண்டுபிடிப்புக்குப் பின்னர் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  இவை கண்காட்சிகளில் நாம் பார்க்கும் கையெழுத்துப் பிரதிகளில் அல்ல,; கியூனிஃபார்ம் எனப்படும் ஆப்பு வடிவ முத்திரைகளைத் தாங்கிய களிமண் பலகைகளில். இந்த பகுதியில், அவரது கவிதையான “தி எக்ஸால்டேஷன் ஆஃப் இன்னானா”விலிருந்து அவர் படைப்பு செயல்முறையை விவரிக்கிறார்.

சுமேரியாவுக்கு பங்களிப்பு

சுமேரிய இலக்கியத்திற்கான என்ஹெடுவானாவின் பங்களிப்புகள் ஏராளம், ஏராளம். இவற்றுள்” இனன்னா தெய்வத்துக்காக இவர் இயற்றிய  பல தனிப்பட்ட பக்திப் பாடல்களும் மற்றும் “சுமேரியன் கோயில் பாசுரப்  பாடல்கள்” என்று அழைக்கப்படும் பாடல்களின் தொகுப்பும் அடங்கும். மேலும் கூடுதல் நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். 

தலைமைப் பூசாரி

EN என்ற பட்டத்தை பெற்ற முதல் அறியப்பட்ட பெண்மணி இவரே, இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாத்திரமாகும்.  இது பெரும்பாலும் அரச மகள்களால் நடத்தப்பட்டது. அவரது தந்தை, அந்நாட்டின் மன்னர் சர்கோன் அவர்களால் அந்தப் பாத்திரத்திற்கு நியமிக்கப்பட்டார். அவரது தாயார் அநேகமாக ராணி தஷ்லுல்டம். உர் நகரம் அமைந்திருந்த அவரது ராஜ்ஜியத்தின் தெற்கில் அதிகாரத்தைப் பாதுகாக்க உதவுவதற்காக சர்கோன் மேற்கொண்ட ஒரு புத்திசாலித்தனமான அரசியல் நடவடிக்கையில் என்ஹெடுவான்னா தலைமைப் பூசாரியாக நியமிக்கப்பட்டார். மேலும் அவரது தந்தையை வழிநடத்தும் அரசியல் குருவும் என்ஹெடுவான்னாதான். இதனால் இவரின் தந்தை 7 போர்களில் வெற்றி வாகை சூடி இருக்கிறார்.

கண்டுபிடிப்பு வரலாறு

                சர் லியோனார்ட் வூலி பண்டைய நகரமான உர் என்ற ஊரில்  உள்ள கிபாருவை தோண்டிய போது,  என்ஹெடுவான்னாவின் பெயருடன் ஒரு “அலபாஸ்டர் வட்டு (Alabaster Disc) அதாவது கால்சியம் அதிகம் உள்ள வட்டில், அந்நாட்டின் சர்கோனுடன் தொடர்புடன், அதன்  பின்புறம் தகவல்  பொறிக்கப்பட்டதைக் கண்டறிந்தார். சுமேரிய இலக்கியத்தின் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட படைப்புகளில் அவரது பெயரைப் பற்றிய குறிப்புகள் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன, இது அந்த படைப்புகளின் சாத்தியமான எழுத்தாளர் பற்றிய தேடலைத் தொடங்கியது. என்ஹெடுவான்னா, பெண்ணியத்திலும் கணிசமான கவனத்தைப் பெற்றுள்ளார், மேலும் அவருக்குக் கூறப்பட்ட படைப்புகள் கிளாசிக்கல் சொல்லாட்சியின் ஆரம்பகால முன்னோடியாகவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

அவரது படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் பல இலக்கியத் தழுவல்கள் மற்றும் பிரதிநிதித்துவங்களைத் தூண்டியுள்ளன.

 என்ஹெடுவான்னா பின்னணி & தொல்பொருள் கண்டுபிடிப்பு

உர் என்ற இடத்தின் ஜிகுராட்டின் (Ziggurat of Ur) நவீன புனரமைப்பு (பின்னணி) கிப்பாரு (Giparu)- வின் இடிபாடுகளுக்கு மேல் என்ஹெடுவான்னா தங்கும்  மதகுரு கட்டிடம் உள்ளது.  இது என்ஹெடுவான்னா வாழ்ந்த மற்றும் புதைக்கப்பட்ட கோயில் வளாகமாகும்.

1927 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்  சர் லியோனார்ட் வூலி, சுமேரிய நகரமான உரின் அகழ்வாராய்ச்சியில் என்ஹெடுவான்னா கால்சைட் (Calcite) வட்டைக் கண்டுபிடித்தார். என்ஹெடுவான்னாவின் உருவம் வட்டில் முக்கியமாக வைக்கப்பட்டு, அவளுடைய முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. பூசாரிகள் புதைக்கப்பட்ட கோயில் வளாகத்தையும் வூலி கண்டுபிடித்தார். வூலி தனது “உர் ரில் அகழ்வாராய்ச்சிகள்” என்ற நூலில் என்ஹெடுவான்னாவை சுருக்கத்தில் விவரித்தார்.  ஆனால் ஆடம் பால்கென்ஸ்டீன் (Falkenstein) என்பவர் “என்ஹெடுவான்னா, அக்காட்டின் நாட்டு சார்கோனின் மகள் என்பதை வெளியிடும் வரை என்ஹெடுவான்னாவின் முக்கியத்துவம் பொதுவாக அங்கீகரிக்கப்படவில்லை. 

1958-ஆம் ஆண்டு , அதைத் தொடர்ந்து ஹலோ மற்றும் வான் டிஜ்க் (Hallo and Van Dijk) 1968-ஆம் ஆண்டு என்ஹெடுன்னாவின் படைப்புகளின் முதல் மொழிபெயர்ப்பு மற்றும் விவாதத்துடன் உள்ள நீள புத்தகத்தையும்  வெளியிட்டனர்.

என்ஹெடுன்னாவின்  தந்தை சார்கோன்தான்,   சார்கோனிய அரச வம்சத்தை  உருவாக்கியவர். பாபிலோனிய சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திய அக்காடிய மன்னரும் இவரே. 

எனவே, என்ஹெடுவான்னா ஓர் இளவரசி. என்ஹெடுவான்னா பாபிலோனிய நகரத்தின் சந்திர பெண்கடவுளின், முதன்மை மதகுருவாக , அரசர் சார்கோனால் நியமிக்கப்பட்டார். பெண்மதகுரு பதவி என்பது உண்மையிலே மிகப் பொறுப்பும், அதிகாரமும் உள்ள ஒன்று. மதகுருதான் அந்த நாட்டு மக்களின் தினப்படி வாழ்க்கை, விவசாயம், கலை மற்றும் வாணிபம் பற்றி நிர்ணயம் செய்பவர். இவர்தான் நகரத்தின் எந்த புது சட்டத்தையும் உருவாக்க முடியும். அப்படிப்பட்ட ஓர் உயர்ந்த பதவியில் மிகவும் பொறுப்புடன், மன்னரையும், மக்களையும் வழி நடத்தினார் என்ஹெடுவான்னா.

தந்தையின் அரசியல் செயல்பாடுகளுக்கு இடையிலும், மிகச் சிறந்த கவிஞராகவும், இலக்கியவாதியாகவும்,  எழுத்தாளராகவும், உருவானார். அப்போது, சுமேரியா மற்றும் பாபிலோன் நகரங்களில்தான் வானவியலும், கணிதமும் உருவாயின.  இவை,

மதகுருக்களின் கட்டுப் பாட்டிலேயே இருந்தன. எனவே, என்ஹெடுவான்னா வானவியல் மற்றும் கணிதத்தின் முன்னோடிகளில் ஒருவராவார். என்ஹெடுவான்னா மற்ற மதகுருக்களுடன் இணைந்து, சமய கோவில்களின் உள்ளே, விண்மீன்கள் மற்றும் சந்திரனை அனைவரும் காண்பதற்கான, நோக்குமிடங்களை உருவாக்கினார். இங்கே, வானியல் பொருள்களின் நகர்வு தொடர்பாய் வரைபடங்கள் காணப்படுகின்றன. மேலும், இவர்,  சமயரீதியான, முதல் காலண்டர் உருவாக்க உதவினார். அதுவே, இன்றும் கூட, ஈஸ்டர் போன்ற மதச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

என்ஹெடுவான்னா அன்றைய காலத்தில் அறிவும், ஞானமும் தேடும் தத்துவஞானியாகத் திகழ்ந்தார். அவரது புகழ், அரசன் மகள் என்பதால் அல்ல, அவரது இலக்கிய புலமையால் தான், அவருக்குப் பெருமை ஏற்பட்டது. இரண்டு சுமேரியா கவிதை/பாடல் தொகுப்புகளை இயற்றினாலும், ஏராளமான தெய்வப்பாசுரங்களின் பதிப்பாசிரியாராய் இருந்தார். என்ஹெடுன்னா, வில்லியம் ஹாலோ என்ற ஐரோப்பிய இலக்கியவாதி, என்ஹெடுவான்னாவின் கவிதைகளையும், எழுத்துக்களையும், மிக ஆழமாக ஆராய்ந்த பின்னரே,

அவரின் அறிவுத்திறன் கண்டு வியந்து பழங்கால சுமேரிய இலக்கியங்களின் ஷேக்ஸ்பியர் என்றும் கூட பாராட்டுகின்றார்.  மேலும்  ஜோன் வெஸ்டென்ஹோல்ஸ் மற்றும் ஆன்னெட் சைகோல் என்பவர்களும் இந்த கருத்தையே முன் வைக்கின்றனர்.

அப்போதைய பெண் கல்வி

அவரது மற்றொரு பிரபலமான படைப்பு ‘இனன்னாவின் உயர்வு’ அல்லது ‘நின்-மே-சர்-ரா’ இது இனன்னா தெய்வத்திற்கான தனிப்பட்ட பக்தி மற்றும் உர்  ஊரிலிருந்து என்ஹெடுவான்னா வெளியேற்றப்பட்டதை விவரிக்கிறது. என்ஹெடுவான்னாவின் கவிதைகள் இனன்னாவிற்கும் அக்காடியன் தெய்வம் இஷ்தாருக்கும் இடையே உள்ள ஒற்றுமையை உறுதிப்படுத்துவதில் பங்கு வகித்தன. என்ஹெடுவான்னாவின் படைப்புரிமை பண்டைய மெசபடோமியாவில் பெண் கல்வியறிவு இருந்ததைத் தெர்விக்கின்றன. என்ஹெடுவான்னாவைத் தவிர,

அரச மனைவிகள் கவிதை இயற்றியதாகவும்  அறியப்படுகிறது, மேலும் நிண்டாபா தெய்வம் ஒரு எழுத்தாளராக செயல்பட்டது: லீக் குறிப்பிடுவது போல் “ஓரளவுக்கு மெசபடோமிய பெண் தெய்வங்களின் விளக்கமான அடைமொழிகள் பெண்களின் கலாச்சார உணர்வையும் பண்டைய காலத்தில் அவர்களின் பங்கையும் வெளிப்படுத்துகின்றன.

என்ஹெடுவான்னாவின் கல்வெட்டு

இந்த கால்சைட் வட்டின் ஒரு பக்கத்தில் தியாகத்தின் காட்சி செதுக்கப்பட்டுள்ளது; என்ஹெடுவான்னாவின் கல்வெட்டு மற்றொன்றில் தோன்றுகிறது கண்காட்சி, என்ஹெடுவான்னாவுக்கு அதிகத் தெரிவுநிலையைக் கொண்டுவரும் என்று பாப்காக் நம்புகிறார். தோராயமாக கி.மு. 2300 க்கு முந்தைய கால்சைட் வட்டில் அவர் சித்தரிக்கப்படுவதையும், 1927 இல் வூலியால் தோண்டி எடுக்கப்பட்டதையும் நாம் காணமுடிகிறது. செதுக்கப்பட்ட காட்சியில் என்ஹெடுவான்னா மூன்று சாதாரண உடையணிந்த பணியாட்களுடன் சடங்குப் பொருட்களை ஏந்திக்கொண்டு, அனைவரும், ஜிகுராட் போன்ற ஒரு வரிசையில் அணிவகுத்துச் செல்வதை சித்தரிக்கிறது. அவரது விரிவான வட்டத் தலைக்கவசம் மற்றும் அவரது கட்டப்பட்ட, விரிந்த அங்கியால் அவள் அடையாளம் காணப்படுகிறாள். என்ஹெடுவான்னாவின் முகம் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது, அவள் தன் கண்களை காதல் மற்றும் போரின் தெய்வமான இனன்னாவை நோக்கி உயர்த்தினாள். அவர் இறக்கும் வரை 40 ஆண்டுகள் தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.

கோவில் பாடல்கள்

இந்த பாடல்கள் உர் மற்றும் நிப்பூரிலிருந்து 37 களிமண் பலகைகளிலிருந்து புனரமைக்கப்பட்டுள்ளன.  அவற்றில் பெரும்பாலானவை உர் III மற்றும் பழைய பாபிலோனிய காலத்தைச் சேர்ந்தவை.

ஒவ்வொரு பாடலும் சுமேரியப் பாந்தியன் மற்றும் தெய்வம் தொடர்புடைய நகரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது,

இந்த கவிதைகளில் சில, 9 ஆம் பாடல், பிற்கால உர் மூன்றாம் வம்சத்திலிருந்து தெய்வீகப்படுத்தப்பட்ட மன்னன் சுல்கியின் கோவிலுக்கு உரையாற்றப்பட்டது,

பாடல்கள்

“நான் பெற்றெடுத்தேன்,

ஓ உயர்ந்த பெண்ணே, உனக்காக.

(நள்ளிரவில்) நான் உங்களுக்கு ஓதிக் கூறியது. பாடகர் அதை நண்பகல் உங்களுக்கு மீண்டும் சொல்லட்டும்!”

கோயில் பாடல்களின் முடிவில் அவர் தனது படைப்புரிமைக்கு உரிமை கோருகிறார்:

“ (என்ஹெடுஅன்னா) என் ஆண்டவரே, (இங்கே) படைக்கப்பட்டதை இதற்கு முன் யாரும் உருவாக்கவில்லை.”

“பாடல்களில் நாம் கேட்கும் குரல் ஒரு திறமையான கவிஞரின் குரல்” என்று ஜுங்கியன் ஆய்வாளரும் என்ஹெடுவானா மொழிபெயர்ப்பாளருமான பெட்டி டி ஷோங் மீடோர் தனது  புத்தகத்தில் (2009ஆம் ஆண்டு) குறிக்கிறார்.

ஆணாதிக்கம் குறைவு

மெசபடோமியாவின் பகுதிகளில் மக்கள்  ஒரு சமூகமாக வாழ்த்திருக்கின்றனர். ஆனால் அந்த நூற்றாண்டுகளில் மற்ற இடங்களை விட குறைவான ஆணாதிக்கம் அங்கு இருந்ததைக் காணமுடிகிறது.

அந்தக் கவிதைகள் என்ஹெடுவான்னாவின் கணிதத்தின் திடமான பிடிப்பைக் குறிப்பதாக இருக்கலாம் – ஒருவேளை, கியூனிஃபார்ம் மற்றும் பிற ஆரம்பகால எழுத்து முறைகளின் வளர்ச்சியுடன் சேர்ந்து, வரலாற்றாசிரியர்கள் கணிதத்தின் தோற்றம் மெசபடோமியாவில் இருப்பதை அறிந்து கொள்ளும்போது ஆச்சரியப்படுவதற்கில்லை.

எழுதுதல் மற்றும் எண்ணுதல் ஆகிய இரண்டும் மெசபடோமியாவின் சுறுசுறுப்பான விவசாயம் மற்றும் ஜவுளிப் பொருளாதாரத்தின் தேவையால் உருவாக்கப்பட்டிருக்கலாம். 

பண்டைய பெண்ணியம்

ஒரு சமூகமாக, மெசபடோமியா  அந்த காலதத்தில் மற்ற இடங்களை விட ஆணாதிக்கம் குறைவாக இருந்தது. உண்மையில், அப்போது பெண்கள் சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்க முடியும்,” மேலும் அது பெண் வரிசை மூலம் பெறப்படலாம் எனத் தகவல் தருகிறார்.

                ஏறத்தாழ கிமு 3400 இல் தொடங்கிய இந்தக் காலகட்டம், மெசபடோமியாவின் நகர்ப்புற மையங்களில் ஒரு பரந்த வளர்ச்சியைக் கண்டது. நாடு மற்றும் பிராந்தியம் முழுவதும் பொருட்களை உற்பத்தி செய்து வர்த்தகம் செய்வதில் தொடர்ந்து விரிவடைந்தது.

அதிகரித்த வணிக ஆர்டர்கள் அதிக தொழிலாளர்கள் தேவை – அவர்களில் பலர் பெண்கள்.  அவர்கள் வீட்டில் தங்கள் பாரம்பரிய பாத்திரங்களுக்கு அப்பால் சென்று அல்லது மத கடமைகளை ஏற்று, மட்பாண்டங்கள், நெசவு, பேக்கிங், கால்நடை வளர்ப்பு, காய்ச்சுதல் மற்றும் கைவினைஞர் வேலைகள் உட்பட பல்வேறு வகையான தொழில்களில் பங்கு வகித்தனர். காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு படம், தறியில் நெசவு செய்யும் பெண்களின் குழுவை, முழு இயக்கத்தில் ஒரு உருவத்துடன், அவளுடைய தலைமுடி அவளுக்குப் பின்னால் பறக்கிறது.

மற்றொன்று மட்பாண்ட சக்கரம் போன்ற தோற்றத்தில் பெண்களைக் காட்டுகிறது; மற்றவற்றில், பெண்கள் ஆண்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள், வெளிப்படையாக சமமாக. ஒரு பெண் தனது வாயில் புல்லாங்குழலைப் பிடித்துக் கொண்டு, சுருள் முடியைச் சுற்றி மென்மையான ரிப்பன்களைப் பிடித்தபடி, ஒரு நேர்த்தியான குழலில் பதித்தபடி, அவர்கள் இசைக் கருவிகளை வாசிப்பதையும் காணமுடிகிறது.

என்ஹெடுவான்னா, மதகுருவாக இருந்தபடியால் திருமணம் செய்து கொள்ளவில்லை.  மேலும் ராஜ மதகுருக்களுக்கு,  ஜிபாரு எனப்பட்ட பல அறைகள் கொண்ட கட்டிடம் வழங்கப்பட்டது. அங்குதான் என்ஹெடுவான்னா வாழ்ந்தார். கவிதை, இலக்கியம், இறைப்பாசுரம், வானவியல் மற்றும் கணிதம் பற்றிய தகவல்களை எழுதினார். இறைவழிபாடு செய்தார். அதன் அறை ஒன்றில்தான், என்ஹெடுவான்னாவின்  உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவர் இறந்தும் கூட இவரின் எழுத்துக்களின்,  சமயரீதியான பாதிப்பு மக்களிடம், பல ஆண்டுகளுக்கு இருந்தது. என்ஹெடுவான்னா தன்னைப்பற்றியும் சுயசரிதையாக களிமண் பலகைகளில் பதிவு செய்து வைத்துள்ளார். அவர் அரசரின் மகளாகவும், மதகுருவாகவும் இருந்தபடியால், பணியாட்களை வைத்தே எழுதி இருக்க வேண்டும் என்று கணிக்கின்றனர். என்ஹெடுவான்னாவைப்பற்றிய தகவல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, 100 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, அன்றைய என்ஹெடுவான்னாதான் அறிவும், புலமையும் சார்ந்த இலக்கிய மேதைமை பெற்றவராகவும், முதன்மை நிலை உள்ளவராகவும் கருதப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *