கவிமுகில் பெ.அறிவுடைநம்பி
காலம் வழங்கிய
வாய்ப்பைக் கொண்டு
களத்தில் இறங்கி விளையாடு!
இலக்கை எட்டும் திறமை
உனக்குள் இருக்கும் வரையில்
போராடு!
வெற்றி நிச்சயமெனும்
உறுதிப்பாட்டை
நெஞ்சில் பதித்து கற்று விடு!
சாதனைப் பாதையில்
தடம் பதிக்கும்
சாகசப் பறவை ஆகிவிடு!
முன்னேற்றம் எனும்
மூலதனத்தை
அடிப்படை யாக்கி நடைபோடு!
தொடர் முயற்சியே
பிரதானம் என்று
மும்முரமாக செயலாற்று!
கடின உழைப்பின்
விளைச்சல் அதுவென
கண்டும் அறிந்தும் மகிழ்ந்து விடு!
Leave a Reply