தனியாருடன் இணைந்து அணு உலைகள் இயக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் எரிசக்தி தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது நாட்டின் மீது அக்கறை உள்ளவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம் தயாரிப்பதற்கு நாட்டில் எவ்வளவோ வழிகள் உள்ளன. காற்றாலைகள் மூலமும், சூரிய சக்தியின் மூலமும், கடல் அலைகளின் மூலமும் ஏற்கனவே நாம் பயன்படுத்தி வரும் பழைய முறையான தண்ணீரின் சக்தியை பயன்படுத்தியும் மின்சாரத்தை தயாரிக்க முடியும். ஆனாலும் செலவு குறைந்த முறையில் அணுசக்தி மூலம் மின்சாரத்தை தயாரிக்க முடிகிறது என்று கூறப்படுகிறது.
ஆனால் அணு உலைகள் என்பது எப்போது வேண்டுமானாலும் வெடிக்க காத்திருக்கும் அணுகுண்டுகள் போன்ற ஆபத்தானது ஆகும்.
நிலநடுக்கம், சுனாமி பயங்கரவாதிகளின் தாக்குதல் போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டு அணு உலைகள் பாதிக்கப்பட்டால் அவற்றிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகளின் மூலம் ஏராளமான மக்கள் உயிரிழக்க வேண்டிய பரிதாபமான சூழ்நிலை ஏற்படும்.
அவை மட்டும் இன்றி இந்த அணு உலைகளை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிற்கு மனிதர்கள், மிருகங்கள் போன்றவை கூட வாழ தகுதியற்றதாக ஆகிவிடும்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா நாகசாகி ஆகிய நகரங்களில் மீது வீசப்பட்ட அணுகுண்டுகளின் கதிர்வீச்சு இப்போதும் அந்தப் பகுதியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அணு உலையிலிருந்து வெளியாகும் வாயுக் கழிவான அயோடின் 131, ஆட்டோ-இம்யூன் தைராய்டு நோய், தைராய்டு புற்றுநோய் ஆகியவைகளை ஏற்படுத்த முடியும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன
மட்டுமல்லாமல் அணுசக்தி தயாரிக்க பயன்படுத்திய கழிவுகள் பல ஆயிரம் ஆண்டுகள் ஆன போதும் அவை செயலிழப்பதில்லை அவற்றை மிகவும் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டியுள்ளது
அத்தகைய கழிவுகள் கூட பயங்கரவாதிகளின் கைகளில் கிடைத்து விட்டால் மிகப்பெரிய அழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அவற்றை பாதுகாப்பது என்பது மிகவும் சவால் மிக்கதாகும்.
2010 -ஆம் ஆண்டு வெளியீட்டின்படி உலகமெங்கும் அணுவுலை மின் உற்பத்தி நிலையங்களில் 99 விபத்துகள் நடந்துள்ளன.
[4]. செர்னோபில் அணு உலை விபத்திற்குப் பிறகு 57 விபத்துகள் நடந்துள்ளன. அணு ஆற்றல் சம்பந்தப்பட்ட அனைத்து விபத்துகளில் 57 சதவிகிதம் (56/99) அமெரிக்காவில் நடந்துள்ளன.
2011 செப்டம்பெரில் பிரான்சில் நிகழ்ந்த அணு விபத்து.
2011, மார்ச் 11இல் நிகழ்ந்த புகுஷிமா, ஜப்பான் அணு உலை விபத்து.
1986, ஏப்ரல் 26இல் நிகழ்ந்த செர்னொபில் அணு விபத்து.
1979-இல் அமெரிக்காவில் முதன்முதலில் நேர்ந்த திரி மைல் தீவு விபத்து.
1961-இல் அமெரிக்க இராணுவத்தின் சோதனை அணு ஆற்றல் உலை, தாழ்திறன் அணுவுலை எண் – ஒன்று (Stationary Low-Power Reactor Number One, SL-1) விபத்து ஆகியவைக் குறிப்பிடத்தக்க விபத்துகளாகக் கருதப்படுகின்றன.
இது போன்ற ஆபத்துக்கள் நிறைந்த அணு உலைகளை தனியார் கையில் கொடுப்பது என்பது தனக்குத்தானே வேட்டு வைக்கும் செயலாகும் .
ஏனென்றால் மிக மிக பாதுகாப்பான முறையில் கையாள வேண்டிய அணு சக்தியை உருவாக்கக்கூடிய யுரேனியம் மற்றும் அணுசக்தி உருவாக்கிய பின் ஏற்படும் கழிவுகள் ஆகியவை தனியார் கைகளில் கிடைத்தால் அதன் மூலம் பயங்கரவாதிகள் எளிதில் கைப்பற்றி விடக்கூடிய அபாயம் உள்ளது. அப்படி பயங்கரவாதிகளின் கையில் அணுசக்தி பொருட்கள் கிடைத்து விட்டாலோ அல்லது அணு உலைகளுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டாலோ என்ன நடக்கும் என்பதை யூகித்து பார்க்கவே கஷ்டமாக உள்ளது.
இதற்கு சமீபத்திய சிறு உதாரணம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷ சாராய மரணங்கள் ஆகும். ஏனென்றால் வெளிநபர்களுக்கு விற்கவோ, வைத்திருக்கவோ அனுமதி இல்லாத மெத்தனால் என்ற இராசாயன பொருள் இரகசிய முறையில் தனி நபர் ஒருவரின் கையில் கிடைத்ததால் பல உயிர்கள் பலியாகின. இது ஒரு மிகவும் சிறிய சம்பவம் ஆகும்.
இதே போன்று அணு உலை திட்டத்திற்குள் தனியார்களை அனுமதித்தால் இதுபோன்று அணு உலை இரகசியங்களும், அணு உலை உற்பத்தி பொருள்களும் பிற தனிநபர்களின் அல்லது பயங்கரவாதிகளின் கைகளுக்கு செல்லாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஆகவே மிகவும் ஆபத்தான அணு உலை விஷயத்தை அரசு மிகவும் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
Leave a Reply