ஆஞ்சனேயா   லாரி சர்வீஸ்
  • By Magazine
  • |
ராஜன் ஆத்தியப்பன் ஏனோ தெரியவில்லை சிறுவயதுமுதல் லாரிகளின்மேல் பகையோடிருக்கிறேன். அதன் முகம் எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. பகைக்கு காரணம் பயமாகவும் இருக்கலாமென்று பழங்கதைகள் சொல்வதும் உண்மையாயிருக்கக்கூடும். எதிரே ஹாரன் பிளிறலோடு லாரி வரும்போது நடைபாதையின் விளிம்புக்கு என்னைத் தள்ளிக்கொண்டு போகிறேன் கவனமற்ற நேரத்தில் பின்னிருந்துத் துடிக்கவைத்து கடந்துபோனால் குலசாமிகள் செவிகளைப் பொத்துமளவு என் உள்மனம் கூச்சலிட்டு அடங்கும். “பண்டொரு காலம் பாதாளமாயிருந்த இந்த நகரம் லாரிகளின் டயர்களை அடுக்கி அடுக்கி உயர்ந்து உயர்ந்து நீ நிற்கும் இப்பெருநகரம் உண்டாகியிருக்கிறது. […]
Read More