சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

  • By Magazine
  • |

SAVKIA -வின் 304-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. அசரி ஆசான் தலைமையில் திரு. அருள்தாஸ் ஆசான், திரு. கே. செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 03-10-2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்தில், திரு. ஜெகஜீவன் ஆசான் நாடிகள் குறித்து விளக்கிப் பேசினார். திரு. அருள்செல்வன் அவர்கள் வாய்வுக்கு லேகியம் செய்முறையைக் கூறினார்.

திரு. கருணாநிதி ஆசான் இருதய பலவீனம், இருதய அடைப்புக்கு மருதம்பட்டை சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார்.

திரு. முத்துமணி ஆசான் நீரிழிவு மற்றும் குறை ரத்த அழுத்தம் இவற்றைக் கட்டுப்படுத்தும் வர்மப்புள்ளிகளை கூறினார்.

திரு. அருள்தாஸ் ஆசான் மலம் கட்டல், மலம் துர்நாற்றம் அடித்தல் இவை மாற மருந்து செய்முறையையும், நெஞ்சுவலி, நாள்பட்ட வயிற்றுவலி, வயிறு உப்பிசம், யானைக்கால்நோய், பிரசவத்துக்கு பின் வரும் வயிறுவலி குணமாக்கும் வீரசெந்தூரம் செய்முறையையும் கூறினார்.

திரு. ஜெபமணி ஆசான் மூலமுளை, பௌந்திரம், கரப்பன், சொறிசிரங்கு இவற்றுக்கு சீனப்பாவு வல்லாதி செய்முறையைக் கூறினார்.

அடுத்ததாக, மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் நாடிகள் குறித்து விளக்கிப் பேசியதோடு, தூக்கம், மன அமைதி, தெளிவு இவற்றுக்கு எளிய மருந்தினையும் அதற்கான வர்மப்புள்ளி தூண்டுதலையும், அதிக போதையினால் பைத்தியம் உண்டானால் அதனை கட்டுப்படுத்துவதற்கான மருந்தினையும், போதைப்பொருள் விஷம் முறிக்கும் மருந்தினையும் கூறினார்.

கூட்டத்தின் இறுதியில் திரு. கே. செல்வநாதன் அனைவருக்கும் நன்றிகூறி கூட்டத்தினை நிறைவுசெய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *