– ஓஷோ
உண்மைக்கு எவ்வித விளக்கமும் தேவையில்லை. அதிகமாக பொய் சொல்லும் போதுதான் நிறைய விளக்கம் தேவைப்படுகிறது. நிறைய வேத நூல்கள் உள்ளன. ஏனெனில், அவற்றை மறைக்க நிறைய விளக்கங்கள் தேவைப்படுகின்றன. நீங்கள் ஓர் விளக்கம் சொல்ல வேண்டியதாகிறது. பிறகு இந்த விளக்கத்திற்கு இன்னும் அதிகபடியான விளக்கம் தேவைப்படுகிறது. இது இப்படியே போய்க்கொண்டிருக்கிறது, கடைசியாக கொடுக்கப்பட்ட விளக்கத்தினாலும் ஒன்றும் விளக்கப்படாமலேயே இருக்கிறது. விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பதால் ஒரு பொய்யை உண்மையாக மாற்றமுடியாது. எதையும் விளக்கிச் சொல்வதனால் விளக்கமுடியாது. நீங்கள் அப்படி நினைக்கலாம். ஆனால், அது சரியானதல்ல.
ஒருமுறை முல்லா நஸ்ருதீன் ஆகாய விமானத்தில் முதல்முறையாக பயணத்தை மேற்கொண்டார். அவர் முதல் பயணமாக இருந்ததால் பயப்பட்டார். ஆனால், அதை அவர் வெளியே காட்டிக்கொள்ள விரும்பவில்லை. எல்லாருக்குமே ஆகாயத்தில் விமானத்தில் முதலில் பிரயாணம் செய்யும்போது பயம் இருக்கும். அவர் தன் பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் சற்று நிமிர்ந்து வீர நடைபோட்டு நடந்து சென்றார். இந்த வீர நடையே ஒரு விளக்கமாகும். தான் எப்போதுமே விமானத்தில் பயணம் செய்து கொள்வதைப்போல் காட்டிக்கொள்ள பிறகு அவர் தம் இருக்கையில் அமர்ந்துகொண்டு தான் இயல்பாக இருப்பதைப் போல காட்டிக்கொள்ள ஏதாவது பேசலாம் என்று நினைத்தார், ஏனெனில் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நீங்கள் உங்களை தைரியமானவர்களைப் போல் காட்டிக் கொள்ளலாம். பேச்சின்மூலம் உங்கள் பயம் குறைந்து வருகிறது. நஸ்ருதீன் தன் இருக்கையின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரிடம் ஜன்னல் மூலம் வெளியே பார்த்துக்கொண்டே சொன்னார் “அதைப் பாருங்கள், மிக அதிகமான உயரத்தில் விமானம் இருந்து கொண்டிருக்கிறது, ஜனங்கள் எல்லாரும் எறும்புகளைப்போல் தோன்றுகிறார்கள்”
Leave a Reply