உணவே மருந்து

  • By Magazine
  • |

கே.பி.பதமநாபன்

பச்சைக் காய்கள் கீரைகள்

                பதமாய் பழுத்த கனிவகைகள்

நச்சே இல்லா உணவாகும்

                நலத்தைக் காக்கும் உணவாகும்

மொச்சை அவரை தானியங்கள்

                முழுமையான நல்லுணவு

இச்சையோடே உண்டிட்டால்

                ஆரோக்கியமும் உண்டாகும்.

சித்தர் கண்ட பச்சிலைகள்

                சிறந்த மருந்தாய் ஆகிடுமே

நித்தம் நெல்லிக் காயுண்டால்

                நின்றன் உடலும் வலிவுறுமே

பாதி வெந்த காய்கீரை

                பாதிக்காதே உடல் நலத்தை

தீதில்லாத வாழ்வுக்குத்

                தினமும் உண்பாய் இருவேளை

உப்பு காரம் புளிதன்னை

                ஓரளவே நீ சேர்த்துண்டால்

ஒப்பில்லாத உடல் நலத்தால்

                உன்றன் ஆயுள் நூறாகும்

துரித உணவைத் தவிர்த்திட்டால்

                தொற்று நோய்கள் வாராது

உரிய நேரத் துண்டிட்டால்

                உன்றன் நலமும் சீராகும்

உணவே மருந்து என வாழ்ந்தால்

                உதிர ஓட்டம் சீராகும்

பணத்தின் செலவும் குறைவாகும்

                பக்கவிளைவும் இலாதாகும்

அளவாய் உணவை உண்டிடுவீர்

                அதிகம் இருந்தால் பகிர்ந்திடுவீர்

விளையும் உணவைச் சேமிப்பீர்                

விரட்டி அடிப்பீர் வறுமையையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *