N.செல்வி ஞானதாஸ்
மலர் மற்றும் ஷீபா பக்கத்து பக்கத்து வீட்டு தோழிகள். எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்து தான் செல்வார்கள். மலர் கொஞ்சம் ஏழ்மை நிலையில் உள்ளவள்.கணவனுக்கு உடல் நிலை சரியில்லாததால் வேலை செய்ய சிரமம் ., மலர் வீட்டில் தையல் தைப்பது வழக்கம். அருகில் உள்ள ஷீபாவும் உதவிகள் செய்வாள்.
இருவருமாக கோயிலுக்கு சென்று வரும்பேது மலர்-ஷீபாவிடம், என் மகளுக்கு பெரிய இடத்து மாப்பிள்ளையின் சம்மந்தம் வந்துள்ளது. சுப்பு கொண்டு வந்தார். கல்யாணத்துக்கு பணம் புரட்டுவதுக்கு நீதான் துணையாய் இருக்கனும். என்றாள்.
ஷீபாவும் சரி அக்கா தரகர் பதில் சொன்னதும். என்னிடம் சொல்லுங்க. நான் எனக்கு தெரிஞ்சவங்க கிட்டயும் கேட்டு உதவிகள் செய்யலாம் என்றாள்.
இரண்டு நாள்களுக்கு பிறகு தரகர் வந்தார். நம்ம’ கலையின்’ புகைப்படத்தை பார்த்ததும் அவர்களுக்கு பிடித்து விட்டது. பணம் ஒன்றும் கொடுக்க வேண்டாமாம். அவர்கள் கல்யாண செலவும் ஒரே செலவாக வைக்கலாம் என்றார்கள்.நகையும் இருப்பது மட்டும் போதுமாம்.மகள் கலையின் அழகும், படிப்பும், குணமும் போதுமாம் என்றார்கள்.
நன்றி ஐயா! என்று இருகைகளாலும் கும்பிட்டுவிட்டு தரகரிடம் இப்போது ஒன்றும் வேண்டாம் என சொல்லிவிட்டு பிறகு கேட்டுகொடுமை படுத்தக் கூடாது. எனது மகள் கஷ்டம் தாங்க மாட்டாள் என்றாள் மலர்.
தரகரும் அவர்கள் பிறகு கேட்க மாட்டார்கள். அவர்களாகவே தேதியும் குறிச்சாச்சி கல்யாண மேடைக்கு வருவது மட்டும் தான் உங்கள் வேலை என்று கூறிவிட்டு சென்றார்.
மலரும் சந்தோஷமாக ஷீபாவிடம் சொன்னார் உதவியும் கேட்டார். ஷீபாவும் திருமண வேலைக்கு உடனிருந்தாள்.
வீட்டில் மலர் எப்போதும் துணி தைத்துக் கொண்டே இருப்பாள். அது மகள் கலைக்கு பிடிக்காது. அவளுக்கு எப்போதும் கைபேசியில் புகைப்படம் எடுப்பதும் அதை வலை தளங்களில் போடுவதும் பிடிக்கும்.
அம்மா நீங்க எப்போதும். துணி தைத்து கொண்டே இருந்தால் மாப்பிள்ளை வீட்டில் உள்ளவர்களோ என்னுடைய தோழிகளோ வந்தா என்னை கேவலமா நினைப்பாங்க. அவங்க அம்மா எல்லாம் எப்போது வெளியே போக கேட்டாலும் கூட்டிட்டு போவாங்க. கேட்பது எல்லாம் வாங்கி கொடுப்பாங்க எனக்கு உங்களை நெனச்சாலே எரிச்சலாக இருக்கு என்றாள் கலை.
எரிச்சலாவா இருக்கு நான் இப்படி உழைப்பதால் தான் உன்ன படிக்க வைக்க முடிஞ்சது. ஒரு குறையும் இல்லாம உன்ன வளக்கவும் முடிஞ்சது .
பக்கத்தில் உள்ளவங்களும் கடனும் தருவாங்க சில நேரங்களில் கடன் வாங்கியதை அவர்கள் திரும்ப பெறுவதும் இல்லை. அவர்களை ஒரு நாளும் மறக்கவும் கூடாது என்றார் மலர்.
உங்க பிரசங்கம் எனக்கு வேண்டாம்.போதும் நிறுத்துங்க என்றாள் கலை. பேசி கொண்டிருக்கும் போதே கலையின் தோழிகளான தாராவும், கில்ஷாவும் வந்தனர்.
என்னடி கலை எப்படி இருக்க.”கல்யாண கலை முகத்திலே தெரியுது. உன் கல்யாணத்துக்கு உன்ன அழகு படுத்தி தேவதை போல் ஆக்குவது என்னுடைய பொறுப்பு” என்றாள் தாரா.
பதிலுக்கு கில்ஷாவும் எங்க கடையில இருந்து அப்பா கிட்ட கேட்டு விலையுயர்ந்த துணி எடுத்து உன் வரவேற்புக்கு உடுத்தி தந்து உன்ன சொப்பன சுந்தரி ஆக்குவது என்னோட செலவு என்றாள்.
அப்போது தேயிலை காப்பியுடன் வந்தார் அம்மா மலர் – இந்தாம்மா காப்பி குடியுங்க பால் வாங்க மாட்டோம் என்றார்.
தாரா எனக்கு பிடிக்காது without tea என்றாள். கில்ஷாவோ தாங்க அம்மா நீங்க கொண்டு வந்ததால் குடிக்கிறேன், என்று சிரித்துக் கொண்டே, கலையிடம் உனக்கு ஒருவாரம் தான் இந்த தேயிலை காப்பி. அடுத்து உனக்கு விதவிதமான உணவுகள் கிடைக்கும் என்றாள்.
கலையும், அம்மா மலரும் உங்களை நம்பிதான் இருக்கோம் என்றார்கள் தோழிகளிடம், திருமணம் முடிந்தது.
மறுநாள் காலை சமையல் அறைக்கு சென்று கைபேசியில் வீடியோ எடுத்து நேற்று தான் திருமணம் முடிந்தது. என் புகுந்த வீட்டு சமையல் அறையை பாருங்கள் என்று, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாள்.
தோழிகளும் கல்யாணம் முடிந்த அடுத்தநாளே சமையலறைக்கு போயாச்சா? இதுக்கு தான் MBA படித்தாயா என்றார்கள் கேலியாக.
பதிலுக்கு இல்லடி எங்க மாமிதான் எல்லா சமையலும் செய்வாங்களாம். நான் தான் சும்மா (Video vlog) வீடியோ வலைப்பதிவு எடுக்கத் தான் வந்தேன் என்றாள்.
அடுத்த நாள் காலையில் அம்மா, அப்பா, சித்தி ஷீபா, பெரியம்மா எல்லோரும் ‘கலை’யை பார்க்க புகுந்த வீட்டிற்கு வந்தார்கள். அப்போது கலையின் மாமி லீலா அடுத்தநாள் 5-ஆவது புதிய கிளை துணிக்கடை திறப்புவிழா வைத்திருக்கோம், எல்லோரும் வாங்க எனக் கூறிவிட்டு, நலம் விசாரித்துவிட்டு, உணவும் அருந்தி செல்லுமாறு அழைத்தார்கள்.
கலையின் கணவர் கரணும் வந்து நலம் விசாரித்துவிட்டு அம்மாவுடன் புதிய கடை திறப்பதற்கு வேலை இருப்பதாக கூறி சென்றார்கள். திரும்பி வந்து உங்க எல்லோரையும் எதிர்பார்ப்பேன் கண்டிப்பா வரனும் என்றான்..
அவர்கள் வெளியே சென்றதும். கலை அம்மாவிடம் நீங்க இந்த குறைந்த விலையுள்ள சேலை உடுத்தி வீட்டில் செஞ்ச பலகாரமும் கொண்டு வருவது எனக்கு பிடிக்கவில்லை. இப்படி நீங்க வந்தா எனக்கு கேவலம் என்றாள்.
அவர்களும் பதிலுக்கு நீ எல்லோரிடமும் அன்பாக இருக்கணும். நீ நல்லா இருந்தா போதும்னு கல்யாணத்துக்கு பணம் தந்ததையும் சொந்தக்காரங்க தர வேண்டாம்னு சொன்னாங்க. நீ நல்ல நிலமைக்கு இருக்கிறதுக்கு அவர்கள் எல்லோரும் காரணம். அவர்களை ஒரு நாளும் மறக்கவே கூடாது என்றார் அம்மா மலர்.
பதிலுக்கு கலை என்னம்மா பூமர் ஆண்டி போல பேசுதீங்க. நான் கஷ்டப்பட்டு நல்லா படித்ததாலதான் இன்னைக்கு நல்லா இருக்கேன். அதுக்கு அவர்கள் காரணமா இதுல வேற நன்றியோடு இருக்கணுமாம் என்றாள் எரிச்சலாக .
ஏழு ஆண்டுகளுக்கு பிறகு கரண் கூறினான் கலை சீக்கிரம் தயாராகு,. ஒரு முக்கியமான நிகழ்வுக்கு போகணும் என்றான். அவள் எங்க என கேட்டவாறே தயாரானாள்.
நிகழ்வுக்கு வந்தவர்களை கலை பார்த்ததும் ஒரே திகைப்பு. ஆச்சரியத்துடன் கண்களை விரித்தாள். ஏனென்றால் பக்கத்துவீட்டு ‘பொம்மிக்கு திருமணம்’. ஷீபாவின் மகள் பொம்மி அழகு சிலையாக திருமண கோலத்தில் நிற்கிறாள். அருகில் உறவினர்கள் அனைவரும் செல்வ செழிப்பாக . நகையுடனும் உயர்ரக ஆடையுடனும் நின்றார்கள்.
அப்பாவும் உடல் நலம் பெற்று கம்பீரமாக. அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பே மாமி லீலா அருகில் வந்து’ “ஆச்சரியமா இருக்கா கலை “- என்றார். கலை சட்டென்று திரும்பி. எப்படி இவர்கள் இப்படி என்று இழுத்தாள்.
மாமி லீலா தொடர்ந்தார் உனக்கு திருமணமான புதிதில் 5-வது கிளை துணிக்கடை திறப்பு விழா வைத்திருந்தோம் இல்லா அப்போது இவர்கள் வரவில்லை.. இரண்டு நாட்கள் சென்றதும் நானும் கரணுமாக அவர்களை பார்க்க சென்றோம். அங்கு அனைவரும் அமர்ந்து சிரித்து பேசி பேசி அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதாவது உன் அம்மா அழகாக தேர்த்தியாக துணி தைத்தர்கள் உன் சித்தி அழகாக வேகமாக பூகட்டினார்கள், பெரியம்மா ஜிப்ஸ் பொரித்தார்கள். உன் பக்கத்து வீட்டு ஷீபா கணக்கீடு படித்திருந்ததாக அறிந்தேன்.
அவர்களின் திறமையை பாராட்டி பல ஐடியாக்கள் கொடுத்தோம், வழிகாட்டினோம், உடனிருந்தோம். அவர்கள் உழைப்பு உயர்ந்தது. அம்மாவுக்கு துணிக்கடை, ஷீபாவுக்கு Finance, பெரியம்மாவுக்கு பலகாரக்கடை, சித்திக்கு பூக்கடை வைக்க உதவினோம் அமோக வளர்ச்சி என்றார்.
கலை என்னிடம் சொல்லவே இல்லை எனக்கு தெரியவே தெரியாது என்றாள். அதற்கு அம்மா மலர், உனக்கு பிள்ளை பிறந்த போதும் அங்குதான் வசதி என அங்கேயே நின்றாய். எங்களை மறந்தே போனாய்.அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாத நேரம் அறிவிப்பு தந்த போதும் நீ பார்க்க வரவே இல்லை. Reals எடுப்பதிலேயே இருந்து Real ஐ -மறந்தாய், நீ வலைதள மாயையில் இருந்து நிஜ வாழ்க்கையை மறந்தாய். நாங்கள் உன்னை பார்த்தோம். நீதான் கவனிக்கவில்லை, அதற்கு உனக்கு நேரமும் இல்லை. மனமும் இல்லை என்றாள்.
என்னை மன்னிச்சுக்கோங்க என்றாள் இரு கைகளையும் கூப்பி. அப்பா இப்போது நல்லா இருக்கிறாரா எனக் கேள்விக் குறியுடன் கேட்டாள் கலை.
கரண் பதிலுக்கு, அவர்கள் உன்னை நல்ல நிலமைக்கு உயர்த்த அவர்களை கவனிக்க மறந்தார்கள். அயராது உழைத்தார்கள். நீ படித்தும் பயன் கொடுக்கவில்லை அவர்களை. நாங்கள் கவனித்தோம், உடனிருந்தோம். என்றான். மாயையை விட்டு நிஜத்திற்கு வந்ததே போதும். இனி ஒற்றுமையாக எல்லோரும் சேர்ந்தே இருப்போம் எனக்கூறி புகைப்படம் எடுத்தார்கள்.
Leave a Reply