மருதாணிச் சொல்
  • By Magazine
  • |
விரைவில் விரல்களில் மருதாணி இட்டு வருவதாய் பளபளத்துக் கிடந்த விடியலில் சொல்லிச் சென்றாய்.. சிவந்து கிடக்கும் உன் மெல்விரல் பார்க்கும்       ஆசையில் நாளெல்லாம் காத்துக்கிடக்கின்றேன். அந்திப்பொழுதின் செவ்வானத்தைப் பார்க்கிறேன் வானத்துக்கு யார் இட்டது மருதாணி எனக்கேட்டுக்கொள்கிறேன். பறவைகள் கூடடைந்த பின்பும் என்னிடத்தில் வராத நீ வழக்கம் போலவே வாக்குத் தவறுகின்றாய்.. நீ உச்சரித்துச் சென்ற மருதாணி என்னும் சொல் பச்சையாகப் படர்ந்து சிவக்கத் தொடங்குகின்றது என்னுள்… – கூடல் தாரிக்
Read More