• By Magazine
  • |
செ.பராந்தகன் காலங்காலமாய் கல்விக்கூடங்களில் கம்பீரமாய் வீற்றிருந்தேன் கருமை நிறம் போர்த்தி கல்விப்பணிக்கு உதவினேன்.. வெண்ணிற எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டு அறிவுப் பசி போக்கினேன்.. ஏற்றம் பெற்ற மாணவர்களை உலகம் முழுவதும் பரப்பினேன்.. கணினி யுகத்தில் பின் தள்ளப்பட்டு காணாமல் தான் போகிறேன். ‘ஸ்மார்ட் ‘ வகுப்புகள் முன்பாக பொழிவிழந்து நிற்கிறேன்.. என்பணியால் கல்விகற்றவர் மூத்த குடிமக்களாகியிருக்க, விரைவில் உலகம் எனை மறப்பினும் கல்விப் பணியில் ஏற்றமுறும். சரித்திரத்தில் நானும் ஒரு கல்விக்கருவியாய் இடம்பெறுவேன்..
Read More