கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைக்கு அடுத்த மூலச்சல் எனும் ஊர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோடு குமரி மண்ணின் மரபார்ந்த அறிவுப் பெருமைகளுள் ஒன்றான சித்த வர்ம வைத்தியத்தில் தலைசிறந்த பகுதியுமாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மூலச்சலில் ராஜேந்திரா சித்த வர்ம மருத்துவமனையை கட்டியெழுப்பி சித்த வர்ம வைத்தியத்திற்கான உலகளவிலான ஆய்வுகளையும் கற்பதற்கு ஏதுவான பாடமுறைகளையும் அமைத்தும்ஆக இடையறாது பணிபுரிந்துவரும் மருத்துவர் றி. இராஜேந்திரன் அவர்களின் தலைமையில் புதிய தென்றல் எனும் இவ்விதழ் 2007 ஆம் ஆண்டில் உதயமானது.
தமிழ்மண்ணின் மரபான பாரம்பரிய மருத்துவ அறிவியல், கலை, இலக்கிய, சமூகப்பரப்பில் அறிவார்ந்த விழிப்புணர்வையும் மேம்பட்ட சமூகத்திற்கான ஏறுநடையையும் இதழியல் வழியாக முன்னெடுப்பதுவே இவ்விதழின் பிரதான நோக்கமாகும். அவ்வாறே மருத்துவர் றி. இராஜேந்திரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு நோக்கக்கருத்தோடு ஒவ்விய இதழியலாளர்களை இணைத்துக் கொண்டு புதியதொரு இதமான உதயமாக புதிய தென்றல் உருவெடுத்தது.